கடலூரில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது திடீரென அறுந்து விழுந்த விளம்பர பலகை.. அதிர்ச்சி சம்பவம்
சென்னை: கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே போக்குவரத்து சிக்னலுக்கான கம்பத்தில் தொங்கவிடப்பட்டு இருந்த விளம்பர பலகை திடீரென்று அறுந்து சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் மீது விழுந்தது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. இந்த சிக்னல்களுக்கான கம்பத்தில் விளம்பர பலகைகள் தொங்கவிடப்பட்டுள்ளது.

அதேபோல் தான் கடலூரில் அண்ணா மேம்பாலம் அருகே போக்குவரத்து சிக்னலில் விளம்பர பலகை தொங்கவிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் இன்று திடீரென்று அந்த பகுதியில் பலத்த காற்று வீசியது.
அப்போது திடீரென்று அந்த விளம்பர பலகை அறுந்து கீழே விழுந்தது. விளம்பர பலகை அறுந்து கீழ்நோக்கி வந்தபோது சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் சென்றார். அவர் மீது அந்த விளம்பர பலகை பொத்தென விழுந்தது. இதனால் அந்த நபர் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் அந்த நபர் காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே உள்ள சாலையில் இருந்து விளம்பர பலகை அறுந்து மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது விழுந்தது அருகே உள்ள கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications