பச்சை துரோகம்.. மளிகை கடைக்குள் 2 பெண்கள் செய்த காரியம்.. வசமாக சிக்கிய வேல்முருகன்
மோசடியில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்
சென்னை: 2 பெண்கள் சேர்ந்துதான் இவ்வளவு பெரிய கிரிமினல் வேலையை பார்த்துள்ளனர்.. இறுதியில் போலீசாரிடம் சிக்கி ஜெயிலிலும் சென்னை புழலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பாரிமுனையில் பாண்டி என்பவர் மளிகை கடை மொத்த வியாபாரம் செய்து வருகிறார்... இந்த கடையில் வேல்முருகன் என்பவர் வேலை பார்த்து வந்தார்..
இவர் மதுரையை சேர்ந்தவர்.. இந்த கடைக்கு முழு பொறுப்பையும் வேல்முருகன்தான் கவனித்து வந்தார். அதாவது கடைக்கு வரும் பணத்தை வாங்கி வைப்பது முதல் பொருட்களை வாங்கி போடுவது வரை எல்லாமே வேல்முருகன்தான்..

பூர்ணிமா
பணப்புழக்கம் அதிகமாக அதிகமாக வேல்முருகனுக்கு பணத்தின்மீது சபலம் வந்துவிட்டது.. வாடிக்கையாளர்கள் பணத்தை ஆட்டையை போட ஆரம்பித்தார். கடந்த 2015-ம் ஆண்டு முதல் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை வேல்முருகன் தன்னுடைய வங்கி கணக்கில் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.. இதுபோக, தன்னுடைய மனைவி மனைவி பூர்ணிமா மற்றும் அவரது தம்பி, மைத்துனி ஆகியோருடன் கூட்டு சேர்ந்து மளிகை கடை பணத்தை களவாடினார்..

வைரவேல் ஸ்டோர்ஸ்
மொத்தம் ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை கையாடல் செய்துள்ளது வேல்முருகன் & குடும்பம்.. இந்த விஷயம் மளிகை கடை ஓனருக்கு லேட்டாகத்தான் தெரியவந்துள்ளது.. இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்தார்.. அதில், "பாரிமுனையில் "வைரவேல் ஸ்டோர்ஸ்" என்ற பெயரில் மொத்த மளிகை கடை நடத்தி வருகிறேன். மதுரையை சேர்ந்த வேல்முருகனை நம்பி கடையின் முழு பொறுப்பையும் ஒப்படைத்தேன்.

நடவடிக்கை
கடந்த 2015ம் ஆண்டு முதல் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்ற பணத்தை அவரது பெயரில் புதிதாக வங்கி கணக்கு தொடங்கியும், அவரது மனைவி பூர்ணிமா, தம்பி செல்வகுமார், தம்பி மனைவி வினோதா ஆகியோருடன் சேர்ந்து கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1.50 லட்சம் ரூபாய் வரை பணம் கையாடல் செய்து ஏமாற்றி விட்டார்.. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

தலைமறைவு
அந்த புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்... இறுதியில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி வேல்முருகனை கைது செய்தனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த அளவுக்கு பண கையாடல் செய்ய காரணமாக இருந்தது தன்னுடைய மனைவி பூர்ணிமாவும், மச்சான் மனைவி வினோதாவும்தான் என்றும், அவர்கள் கொடுத்த ஐடியா படியே பணத்தை களவாடியதாகவும் வாக்குமூலம் தந்தார்..

கைது
இதனிடையே, பூர்ணிமாவும், வினோதாவும் மாயமாகினர்.. எனவே, தலைமறைவான அவர்களை தேடும் பணி ஆரம்பமானது.. இவர்கள் 2 பேரும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பதுங்கி இருந்தது தெரியவந்ததையடுத்து அவர்களை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.. 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜெயிலிலும் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications