ரெட் கலர் சுடிதார்.. பார்க்க படு ஸ்மார்ட்.. ஆனால் செய்த வேலையை பாருங்கள்!
நகை திருடிய 2 இளம்பெண்களை பொதுமக்கள் விரட்டி பிடித்துள்ளனர்
Recommended Video
சென்னை: சுடிதார் அணிந்த இந்த இரு இளம்பெண்களை பார்க்கவே படு ஸ்மார்ட்டாக இருக்கிறார்கள்.. இவர்களா இந்த காரியத்தை எல்லாம் செய்தது என்று நினைத்தால் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் பீமண்ணா கார்டன் முதலி தெருவில் 2 இளம் பெண்கள் இன்று சுற்றி திரிந்துள்ளனர். ஒருவர் மஞ்சள் கலர் சுடிதார், இன்னொருவர் ரெட் கலர் சுடிதாரில் இங்குள்ள கடைப்பகுதிக்கு வந்துள்ளனர்.

"நாங்க வெளியூர்.. அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்க நகைகளை அடகு வைக்கணும், அடகு கடை இங்கே எங்கே இருக்கு?" என்று அப்பகுதி மக்களிடம் கேட்டுள்ளனர்.
அடகு கடை ஏதுமில்லை என்று அங்கிருந்தோர் சொல்லி உள்ளனர். ஆனால் அந்த பெண்களோ, கையில் நகைகளை எடுத்து காட்டி, "அப்படின்னா, இந்த நகைகளை வாங்கிக்கிட்டு, நீங்களே ஒரு தொகையை தாங்களேன்" என்று கேட்டுள்ளார்கள். இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் அபிராமபுரம் போலீசுக்கு தகவல் தந்தனர்.
போலீசாரும் விரைந்து சென்று, அந்த பெண்களை ஸ்டேஷன்அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது இருவரும், ஈரோடு மாவட்டம் பள்ளி பாளையத்தைச் சேர்ந்த பூங்கொடி, நந்தினி என்பது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து ஐந்து கொலுசுகள், செயின்கள் ஆகியவை போலி என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 2 பெண்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications