3 பேருமே ஹெல்மட் போடல.. ஓவர் ஸ்பீட்.. குறுக்கே வந்த மாடு.. பஸ்ஸில் சிக்கி விபத்து.. பறிபோன 2 உயிர்!
பள்ளி வாகனம் மோதி 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்
சென்னை: ஒரே பைக்கில் 3 இளைஞர்கள் படு ஸ்பீடாக வந்துள்ளனர்.. ரோட்டில் மாடு ஒன்று குறுக்கே வரவும், அதன் மீது மோதாமல் இருக்க முயன்றபோது, எதிரே வந்த ஸ்கூல் பஸ் மீது மோதி 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.. ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சென்னை, தாம்பரம், ஐஏஎப்., சாலையில் வசித்தவர் பிரசாந்த் என்ற 20 வயது மாணவர். இவர், சேலையூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியில் கல்லுாரியில், முதல் வருடம் படித்து வந்தார். ஜெகநாதன், தினேஷ் ஆகியோர் பிரசாந்தின் நண்பர்கள். இவர்கள் இருவருக்கும் 18 வயதாகிறது.

இந்நிலையில் நேற்று சாயங்காலம் 3 பேரும் ஒரே பைக்கில், வெளியே சென்றுவிட்டு, சேலையூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். சேலையூர்-அகரம் தென் சாலையில் பைக்கை ஓவர் ஸ்பீடாக ஓட்டி வந்துள்ளனர்.. 3 பேருமே ஹெல்மட்டும் போடவில்லை.
இந்த சமயத்தில், திடீரென மாடு ஒன்று சாலையின் குறுக்கே வந்துள்ளது. இதை பார்த்த 3 பேரும், அதன்மீது மோதாமல் இருக்க சடன் பிரேக் போட்டனர்.. அப்போது, தடுமாறி கீழே விழுந்துவிட்டனர். அந்த சமயத்தில், பின்னாடியே ஒரு தனியார் பஸ் ஒன்று வந்து, இவர்கள் மீது மோதியது.
இதில் பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி பிரசாந்த் மற்றும் தினேஷ் இருவரும் அங்கேயே உயிரிழந்தனர்.. பஸ் சக்கரத்தில், பல அடிதூரத்துக்கு 3 பேரின் உடலும் நசுங்கிய நிலையில் இழுத்துசெல்லப்பட்டது.. ஜெகநாதன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
தகவலறிந்து வந்த போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் பொதுமக்கள் கண்முன்னிலையில் நடந்த இந்த கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. உயிரிழந்த 2 பேரின் சடலங்களையும் மீட்டு விசாரணையை ஆரம்பித்து, ஸ்கூல் பஸ் டிரைவர் ஏழுமலையை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications