டைப் 1 நீரிழிவு.. மாணவர்களே டோண்ட் ஒர்ரி.. வகுப்பறையில் சிற்றுண்டி.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
சென்னை: டைப் 1 நீரிழிவு பாதிப்புடைய மாணவர்கள் தங்களுடன் நீரிழிவு பாதிப்பிற்கான மருந்துகள் மாத்திரைகளை எடுத்துவர அனுமதிக்க வேண்டும். பழங்கள், சிற்றுண்டிகள், குடிநீர், உலர் பழங்கள் உள்ளிட்டவற்றையும் தங்களுடன் எடுத்து வர அனுமதிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
நம் உடலில் உள்ள கணையத்தில் சுரக்கும் இன்சுலின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை நிர்வகிக்கிறது. இது செல்கள் மற்றும் திசுக்களுக்கு ஆற்றல் தேவைப்படும் குளுகோசை உடல் முழுவதும் எடுத்துச் செல்ல உதவுகிறது. உடல் தேவையான அளவுக்கு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ, உடலில் இன்சுலின் சுரப்பு இல்லை என்றாலோ, உடலில் இன்சுலின் சுரந்தாலும் அதை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை என்றாலோ நீரிழிவு நோய் ஏற்படும்.

டைப் 1 வகை நீரிழிவு ஒரு ஆடோ-இம்யூன் குறைபாடாகும். பிறக்கும் போதே இந்த குறைபாட்டுடன் குழந்தைகள் பிறக்கும் ஆபத்துகள் உள்ளன. இன்சுலின் இல்லை என்னும் போது, அல்லது இன்சுலின் குறைந்தால், உங்கள் ரத்த ஓட்டத்தில் க்ளூக்கோஸ் கலந்து, சர்க்கரை அளவு அதிகரிக்கும். அதிக சர்க்கரை அளவு நீடித்திருக்கும் போது, நீரிழிவு அறிகுறிகள் தோன்றி, பல்வேறு உபாதைகளும் ஏற்படும். முறையற்ற உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, வேறு சில நோய்கள் ஆகியவை நீரிழிவு நோய்க்கான காரணியாக அமைகின்றன. பெரும்பாலும், இது மரபணு ரீதியாக ஏற்படுவதில்லை என்றாலும்.டைப் 1 டயாபிடீஸ் பாதிப்பு ஏற்பட்டால் தினமும் இன்சுலின் ஊசிகள் செலுத்த வேண்டியது அவசியம்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில், "பன்னாட்டு டயாபெடிஸ் அமைப்பின் அறிக்கையில், உலக அளவில் இந்தியாவில் அதிக அளவு குழந்தைகள் மற்றும் வளர்இளம் பருவத்தினர் வகை-1 நீரிழிவு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய குழந்தைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் இன்சுலின் மருத்தினை ஊசி வழியே செலுத்துதல், நாள்தோறும் ரத்த சர்க்கரை அளவைக் கண்காணித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இத்தகைய வகை-1 நீரிழிவு குறைபாடுடைய மாணவர்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை பள்ளியில் செலவிடுவதைக் கருத்தில் கொண்டு, அவர்களின் நலன் காக்கும் பொருட்டு, பள்ளி நிர்வாகத்திற்கு தகுந்த அறிவுரைகளை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
வகை-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களது ரத்த சர்க்கரை அளவை சோதித்து அறிதல், இன்சுலின் எடுத்துக் கொள்ளுதல், வழக்கமான உணவு உண்ணும் நேரத்திற்கு இடைப்பட்ட நேரங்களில் சிற்றுண்டி எடுத்துக் கொள்ளுதல், மருத்துவர் பரிந்துரைப்படி நீரிழிவு தன்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் போன்றவை தேவைப்படலாம். எனவே, இத்தகைய மாணவர்கள் மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்வு நேரம் மற்றும் பள்ளி நேரங்களில் வகுப்பாசிரியர்கள் அனுமதிக்க வேண்டும்.
மருத்துவரின் பரிந்துரைப்படி அவர்கள் விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்பளிக்க வேண்டும்.பள்ளி வகுப்பு நேரங்கள் மற்றும் தேர்வு நேரங்களில் இத்தகைய பாதிப்புடைய மாணவர்கள் தங்களுடன் நீரிழிவு பாதிப்பிற்கான மருந்துகள் மாத்திரைகளை எடுத்துவர அனுமதிக்க வேண்டும். பழங்கள், சிற்றுண்டிகள், குடிநீர், உலர் பழங்கள் உள்ளிட்டவற்றையும் தங்களுடன் எடுத்து வர அனுமதிக்க வேண்டும்.

குளுக்கோ மீட்டர் போன்ற ரத்த சர்க்கரை அளவை சோதித்தறியும் உபகரணங்களை பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களுடன் எடுத்துவர அனுமதிக்க வேண்டும்.தொடர் குளுக்கோஸ் கண்காணிப்பிற்கு CGM-Corous glucoee monitoring, FGM- Flash glucoee monitoring, இன்சுலின் பம்பு போன்றவற்றை, அத்தகைய பாதிப்புடைய மாணவர்கள் தங்களது உடலில் பொருத்தி பயன்படுத்தி வந்தால், அதனை தொடர்ந்து பள்ளி நேரம் மற்றும் தேர்வு நேரங்களில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
ஸ்மார்ட் போனை பயன்படுத்தி ரத்த சர்க்கரை அளவீடுகள் மேற்கொண்டால், தேர்வு நேரங்களின்போது மாணவர்களின் அலைபேசியினை தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து குளுக்கோஸ் அளவினைக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த அறிவுரைகளை அனைத்து தலைமையாசிரியர்கள், பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பிடவும், பள்ளி நிர்வாகங்கள் தங்களிடம் பயிலும் வகை-1 நீரிழிவு பாதிப்புடைய மாணவர்களின் நவனைக் காக்கும் பொருட்டு அவர்களுக்கு தகுந்த வகுப்பறை சூழலை ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications