Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

படிக்கும் போதே வேலைக்கு சேர பயிற்சி.. பள்ளி மாணவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் சொன்ன குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு படிக்கும் போதே தொழில் திறனை வளர்க்கும் பிரத்யேக பயிற்சி வழங்கும் திட்டத்தை ஐக்கிய அரபு அமீரக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தால் மாணவர்கள் படிப்பு மட்டுமல்லாமல் தொழில் திறனையும் வளர்த்துக் கொள்வதால் அவர்களால் சுலபமாக தனியார் துறையில் பணியமர முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கும், இந்தியாவுக்கும் இடையேயான தொடர்பை யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்தியாவுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பங்கும் கணிசமானது.

UAE good news for school students Training to get a job while studying

ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் நிறுவனங்கள் தற்போது அதிக அளவில் உள்ளன. தொழிற்சாலைகள் முதல் ஐடி நிறுவனங்கள் வரை அங்கு புதிது புதிதாக தனியார் நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. இது நல்ல விஷயம் தான் என்றாலும், தனியார் துறையில் பணி செய்வதற்கு ஏற்ற திறமையான பணியாளர்கள் கிடைப்பதில்லை. அங்கு பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடரும்பட்சத்தில், எதிர்காலத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பிக் ஃபோர் தொழில்முறை சேவை நிறுவனமான KPMG இன் சமீபத்திய அறிக்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பல உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஏற்கனவே தங்கள் தொழில் இலக்குகளில் கவனம் செலுத்துவதாகக் காட்டுகிறது. 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களில் சுமார் 40% பேர் பல்கலைக்கழகத்தில் வணிகம் அல்லது சுகாதாரம் பற்றி படிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினர்.

மைண்ட் தி கேப்' என அழைக்கப்படும் இந்த அறிக்கை, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 78 நாடுகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளி மாணவர்களை ஆய்வு செய்தது. எதிர்கால வேலை வெற்றிக்கான தகவல் தொடர்பு, விமர்சன சிந்தனை, படைப்பாற்றல், சமூக திறன்கள் மற்றும் தலைமைத்துவம் போன்ற திறன்களின் முக்கியத்துவத்தை மாணவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தொழில் திறன் பயிற்சியை வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்தை ஓரிரு நாட்களில் செயல்படுத்தும் நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. 9ஆம் வகுப்பு முதல் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் வரை இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 3,500 மாணவர்களுக்கு ஓராண்டு வரை இந்த தொழில்திறன் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். அதன் பின்னர், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் 5 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படும்.

மாணவர்களுக்கு பல்வேறு தனியார் துறைகளில் இருக்கும் பணிகளின் அடிப்படை பயிற்சி, சிக்கல்களுக்கு விரைந்து தீர்வு காணும் பயிற்சி உள்ளிட்டவை இந்த திட்டத்தில் வழங்கப்படும். தனியார் நிறுவனங்களின் பங்கேற்புடன் இந்த பயிற்சிகள் வழங்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தால் மாணவர்கள் படிப்பு மட்டுமல்லாமல் தொழில் திறனையும் வளர்த்துக் கொள்வதால் அவர்களால் சுலபமாக தனியார் துறையில் பணியமர முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+