கல்வி தான் யாராலும் அழிக்கவே முடியாத ஆயுதம்! ஒரு லேப்டாப் இருந்தாலே உலகம் உங்கள் கையில்.!- உதயநிதி
சென்னை: அரசு சார்பில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஒரு லேப்டாப், இணைய வசதி, புதிய யோசனை இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்றார். மேலும், படிக்காமல் வென்றவர்கள் சிலர் தான் என்றும் படிப்பால் வென்றவர்களே இங்கு பல லட்சம் பேர் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு அரசு சார்பில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை நந்தனத்தில் நடைபெற்றது. "உலகம் உங்கள் கையில்" என்னும் தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு 10 லட்சம் லேப்டாப் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்றைய தினம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி வரவேற்புரை ஆற்றினார். பெரியார் தொலைநோக்குப் பார்வையில் அன்று சொன்னவை, இன்று அறிவியல் கண்டுபிடிப்புகளாகி உள்ளன என்ற உதயநிதி, அப்போதே வீடியோ கால் குறித்து பெரியார் பேசியிருந்தார் என்றும் அவை தான் இப்போது அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் நிகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவில் ஐடி துறைக்கே அடித்தளமிட்டவர் கருணாநிதி என்றும் உதயநிதி தெரிவித்தார். மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்டாப் நிச்சயம் பயன் தருபவையாக இருக்கும் என்றும் உதயநிதி தெரிவித்தார். மைக்ரோசாப்ட், பேஸ்புக், ஸ்பேஸ்எக்ஸ் என உட்பட உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள் எல்லாம் தொடங்கியது ஒரு லேப்டாப்பில் தான் என்றும் ஒரு லேப்டாப், இணைய வசதி, புதிய யோசனை இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்றும் உதயநிதி தெரிவித்தார்.
கல்வி தான் யாராலும் திருட முடியாத, அழிக்க முடியாத ஆயுதம் என்ற அவர், படிப்பு இல்லாமல் வென்றவர்கள் 100 பேர் என்றால், படிப்பால் வென்றவர்கள் லட்சம் பேர் இருக்கிறார்கள் என்றும் பேசினார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications