அது அப்பா சட்டை.. தப்பே இல்ல.. உதயநிதிக்கு பதவி.. விஜய் பேசிய வீடியோ வைரல்
சென்னை: தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இது அரசியலில் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வாரிசு அரசியல் குறித்தும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இந்நிலையில் லியோ பட விழாவில் விஜய் அப்பா சட்டை குறித்து பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விஜய் பேசியது என்ன.
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் என்று கடந்த சில மாதங்களாகவே தகவல் வெளியாகி வந்தது. ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்று இரவு வெளியான அறிவிப்பு அமைச்சரவை மாற்றத்தை உறுதி செய்துவிட்டது. அதில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்பதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மனோ தங்கராஜ், க.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகிய மூன்று பேர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியான செந்தில் பாலாஜி, மற்றும் கோவி. செழியன், ராஜேந்திரன், நாசர் ஆகிய நான்கு பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். புதிய அமைச்சர்களுக்கான இலாகா அறிவிக்கப்படவில்லை. மேலும் பல அமைச்சர்களின் இலாகா மாற்றப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 3.30 மணியளவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். இது அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானதை, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வரவேற்று வருகின்றனர். சினிமா பிரபலங்களும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் அதிமுக, நாம்தமிழர், பாஜக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதை வாரிசு அரசியல் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் நடிகர் விஜய் அரசியல் என்ட்ரி ஆகியுள்ளதால், உதயநிதி துணை முதல்வராக்கப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர்.
சமூகவலைதளங்களில் இப்போதே விஜய் VS உதய் என்ற விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில் விஜய் தொடர்பான வீடியோவை வைத்து, உதயநிதி குறித்து விமர்சித்து சமூகவலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். லியோ பட வெற்றி விழாவில் விஜய் ஒரு மகன் அப்பா - மகன் உறவு குறித்து பேசியிருப்பார்.
அதில், "அப்பாவை பார்த்துதான் மகன் வளர்வான். அவர் செய்வதை எல்லாம் செய்வான். அவரின் சீட்டில் உட்காரலாமா, அதுக்கு தகுதி இருக்கிறதா இல்லை என்பதெல்லாம் அவனுக்கு தெரியாது. அப்பாவின் சட்டை அணிவான். அது அவனுக்கு சரியாக இருக்குமா என்று கூட தெரியாது. அது அப்பா சட்டை. அவ்வளவுதான். அப்பா மாதிரி ஆகணும்னு கனவு. அதுல தவறு என்ன. அதனால நீ பெருசா கனவு காணு நண்பா. அதையெல்லாம் ஒருத்தரும் எதுவும் சொல்ல முடியாது." என்று பேசியிருப்பார்.
அப்போது விஜய், ரஜினியை மனதில் வைத்து அந்த நிகழ்ச்சியில் பேசியிருப்பார். அதை தற்போது உதயநிதியுடன் ஒப்பிட்டு விஜய் ரசிகர்களே பரப்பி வருகின்றனர். "அன்றே கணித்தார் தளபதி. 2026 தேர்தலில் வெற்றி நமக்கு தான்." என்று தவெகவினர் கருத்து தெரிவிக்கின்றனர். அதேபோல திமுகவினர், "அதுதான் உங்கள தலைவரே அப்பா சட்டைய மகன் போடறது தப்பு இல்லைனு சொல்லிட்டார்ல. இனியும் எதுக்கு வாரிசு அரசியல்னு விமர்சனம் பண்றீங்க." என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications