காங்கிரஸ், விசிகவை இறங்கி அடியுங்கள்.. கிரீன் சிக்னல் கொடுத்த உதயநிதி.. ஆட்டம் சூடு பிடிக்குது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. இந்த இரண்டு தொகுதிகளிலுமே ஆளும் தவெக வெற்றி பெற்றிருந்தாலும், யாருடைய தயவும் இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட திமுக இரண்டு இடங்களிலுமே கணிசமான வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

விசிக மற்றும் காங்கிரஸ் போன்ற கூட்டணிக் கட்சிகள் எதுவுமே உடன் இல்லாத நிலையிலும், திமுக தனியாகவே பலம் வாய்ந்த வாக்கு வங்கியை நிரூபித்துக் காட்டியுள்ளது. இந்தத் தேர்தல் முடிவு விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கும் அவரது கட்சிக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

udhayanidhi stalin dmk

பயத்தில் விசிக: மீண்டும் திமுக பக்கம் சாயும் திருமாவளவன்?

சமீபத்தில் தவெக கூட்டணியில் இணைந்த விசிக, அரசியல் அரங்கில் முதிர்ச்சியற்ற வகையில் நடந்துகொள்வதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இடைத்தேர்தலில் திமுக தனித்து நின்று காட்டிய வாக்கு பலத்தைக் கண்டு விசிக தலைமை நிலைகுலைந்துள்ளது.

இதனால், "திமுக இரண்டாம் இடம் பிடித்தது போதாது; திமுக வெற்றி பெற வேண்டும் என்றால் விசிக போன்ற கூட்டணிக் கட்சிகள் அவசியம். விசிக எங்கு இருக்கிறதோ, அந்தக் கூட்டணிதான் வெல்லும்" என்றெல்லாம் திருமாவளவன் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பேசி வருகிறார். திமுகவின் கவனத்தை ஈர்த்து, மீண்டும் ஒரு எதிர்காலக் கூட்டணிக்கு வழிவகுக்கலாம் என்பதே அவரது திட்டமாகக் கூறப்படுகிறது.

ஆனால், உண்மை நிலவரம் வேறு மாதிரியாக உள்ளது. கடந்த பொதுத்தேர்தலில் விசிக கூட்டணியில் இருந்தபோது கிடைத்த வாக்குகளை விட, இப்போது எந்தக் கூட்டணியும் இல்லாமல் தனித்துப் போட்டியிட்டபோதே திமுகவிற்குப் பல இடங்களில் வாக்குகள் கூடியுள்ளன. இதன் மூலம் விசிக-வின் வாக்கு வங்கி மிகப்பெரிய மாயை என்பதும், விசிக இல்லாமலேயே திமுக களத்தில் மிக வலுவாக நிற்க முடியும் என்பதும் தெளிவாகியுள்ளது. தங்களின் அரசியல் செல்வாக்கு சரிந்து வருவதை உணர்ந்தே, திருமாவளவன் மீண்டும் திமுக-விடம் தூதுவிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"இனி கூட்டணியே கிடையாது": கறார் காட்டிய உதயநிதி ஸ்டாலின்

திருமாவளவன் தரப்பில் இருந்து திமுக தலைமையிடம் மீண்டும் கூட்டணி குறித்து மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், திமுக தலைமை இதற்குத் துளியும் ஆர்வம் காட்டவில்லை.

குறிப்பாக, திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இந்த விவகாரத்தில் மிகக் கடுமையான முடிவை எடுத்துள்ளார். "திமுகவிற்கு இனி விசிக-வோ அல்லது காங்கிரஸோ தேவையில்லை. தேர்தல் களத்தில் தனியாக நின்றே நம் பலத்தை நிரூபித்துவிட்டோம். சுயநல அரசியலுக்காக முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் கட்சிகளுடன் எதிர்காலத்தில் எந்தக் காலத்திலும் கூட்டணி கிடையாது" என்று அவர் கறாராக 'நோ' சொல்லிவிட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐடி விங்கிற்கு முழு சுதந்திரம்

கூட்டணி கதவுகளை அடைத்ததோடு மட்டுமின்றி, திமுக ஐடி விங்கிற்கு உதயநிதி ஸ்டாலின் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசிக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் போலி அரசியல் நிலைப்பாடுகளையும், தேர்தல் நேரத்தில் அவர்கள் செய்யும் சந்தர்ப்பவாத அரசியலையும் சமூக வலைத்தளங்களில் தயவுதாட்சண்யமின்றித் தோலுரித்துக் காட்டுமாறு ஐடி விங்கிற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. கூட்டணி தர்மம் என்ற பெயரில் இதுவரை அமைதி காத்து வந்த திமுக உடன்பிறப்புகள், இனி காங்கிரஸ் மற்றும் விசிக-வின் இரட்டை வேடங்களை நேரடியாக விமர்சிக்கத் தயாராகிவிட்டனர். இதன் காரணமாகேவ மாணிக்கம் தாக்கூரை விமர்சனம் செய்து கடுமையான அறிக்கையும் வெளியிடப்பட்டது.

இடைத்தேர்தலில் தனித்து நின்ற திமுக தங்களின் செல்வாக்கை உறுதிப்படுத்தியிருப்பது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் விசிக-வும் காங்கிரஸும் திமுக கூட்டணியில் இருந்து நிரந்தரமாகக் கழற்றிவிடப்பட்டுத் தனித்து விடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+