தாயில்லாமல் இந்த இடத்தில் நானில்லை.. உதயநிதியின் பேச்சை கேட்க சட்டசபைக்கு வந்த துர்கா ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் பேச்சை கேட்பதற்காக அவரது தாய் துர்கா, மனைவி கிருத்திகா, சகோதரி செந்தாமரை உள்ளிட்டோர் சட்டசபைக்கு வருகை தந்தனர்.

Recommended Video

    சட்டென Kanimozhi டாப்பிக்கை கையில் எடுத்த Udhayanidhi | Oneindia Tamil

    சமூகநலத் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்களை மீது இன்று விவாதம் நடைபெற்றது. திமுக சார்பில் முதல்வரின் மகனும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    சட்டசபைக்கு வந்ததுமே அவருக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அவருக்கு சால்வை அணிவித்து புத்தகங்களை பரிசாக கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அவர் பேச ஆரம்பித்தபோது மேஜையை தட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.

    உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தின் ஆணையராக மாற்றுத்திறனாளியை நியமிக்க வேண்டும். மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகள் அனைவருக்கும் மாத உதவித்தொகை வழங்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் கோரிக்கை வைத்தார்.

    மாண்புமிகு உறுப்பினர் உதயநிதி அவர்களே

    மாண்புமிகு உறுப்பினர் உதயநிதி அவர்களே

    அப்போது உறுப்பினர்கள் கரகோஷம் எழுப்பினர். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் "மாண்புமிகு உறுப்பினர் உதயநிதி அவர்களே... " என தொடங்கி அவரது கோரிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு அவற்றை படிப்படியாக நிச்சயம் நிறைவேற்றுவோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

    காரில் மாற்றி ஏற்றியது

    காரில் மாற்றி ஏற்றியது

    இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தனது காரில் மாற்றி ஏற்றியது குறித்தும் உதயநிதி, எடப்பாடி பழனிச்சாமி காரில் ஏற முயற்சித்ததும் குறித்தும் கலகலப்பாக பேசினார். எதிர்க்கட்சித் தலைவருக்கும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கும் வணக்கம் என்றும் உதயநிதி கூறினார்.

    துர்கா- கிருத்திகா- செந்தாமரை

    துர்கா- கிருத்திகா- செந்தாமரை

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் உதயநிதி சட்டசபையில் பேசியிருந்தாலும் இந்த ஆண்டு முழு பட்ஜெட்டில் முதல்முறையாக உதயநிதி ஸ்டாலின் பேசினார். இதனால் இந்த பேச்சை கேட்க அவரது தாயும் முதல்வரின் மனைவியுமான துர்கா ஸ்டாலின், உதயநிதியின் மனைவி கிருத்திகா, அவரது சகோதரி செந்தாமரை உள்ளிட்டோர் சட்டசபைக்கு வந்திருந்தனர்.

    உதயநிதியை ரசித்த அன்பில் மகேஷ்

    உதயநிதியை ரசித்த அன்பில் மகேஷ்

    அவர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர். உதயநிதியின் நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் தனது இருக்கையில் அமராமல் உதயநிதி பேசி முடிக்கும் வரை அவருக்கு அருகிலேயே உட்கார்ந்து உற்சாகப்படுத்தினார். இதே போல் பள்ளிக் கல்வித் துறை மீதான மானிய கோரிக்கையின் போது எந்தவித குறிப்புகளும் இன்றி அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதை உதயநிதி தனது இருக்கையில் அமராமல் ரசித்து கொண்டிருந்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+