மகளிர் உரிமைத்தொகை ரூ.1000.. கூடுதலாக 9 லட்சம் பெண்கள் சேர்ப்பு.. உதயநிதி ஸ்டாலின் குட் நியூஸ்!
சென்னை: விடுபட்ட மகளிருக்கு ஓரிரு மாதங்களில் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் 40% மனுக்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காகவே வந்துள்ளன என்றும் 9 லட்சம் பெண்கள் கூடுதலாக இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்ச்சியில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இதில், ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மணமக்களின் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. இந்த விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி, திமுக அரசின் மகளிர் மேம்பாட்டு திட்டங்கள் பற்றி பேசி எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தமிழகத்தில் 1.15 கோடிக்கும் மேற்பட்ட மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கி, அவர்களின் பொருளாதார தன்னிறைவை உறுதி செய்கிறது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 40% மனுக்கள் இந்தத் திட்டத்திற்காகவே வந்துள்ளன. விடுபட்ட மகளிருக்கு ஓரிரு மாதங்களில் இந்த உரிமைத் தொகை வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு மேல்முறையீடு செய்த 9 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இது தமிழக மகளிரின் சுயமரியாதையையும், வேலைவாய்ப்பு விகிதத்தையும் (43%) உயர்த்தியுள்ளது" என்றும் தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
மேலும் பேசிய அவர், "திமுக அரசின் மற்றொரு சாதனையாக, விடியல் பயணம் திட்டத்தின் கீழ் 730 கோடி இலவச பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர்.
இந்தத் திட்டங்கள், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை 11.19% ஆக உயர்த்தியுள்ளன, இது இந்தியாவின் 6.5% வளர்ச்சியை விட இரு மடங்கு அதிகம். திராவிட மாடல் அரசு, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, சமூகநீதியை உறுதி செய்கிறது," என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின், "சுயமரியாதைத் திருமணங்கள் திராவிட இயக்கத்தின் பங்களிப்பால் சாத்தியமானவை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலைஞர் கல்லூரியை தொடங்க அறநிலையத்துறை நிதியைப் பயன்படுத்தியதை விமர்சித்து, அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அறநிலையத்துறை நிதி மக்களுக்கே சொந்தம். இதைப் பயன்படுத்தி ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்குவது தவறல்ல. உச்சநீதிமன்றமும் இந்த வழக்கை தள்ளுபடி செய்து, அரசின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியது.
அறநிலையத்துறை நிதியை வைத்து மணமக்களுக்கு எப்படி திருமணம் நடத்துவீர்கள்? என கேட்டாலும் கேட்பார். இந்தத் திருமணங்கள், ஏழை மக்களுக்கு எளிமையாகவும், சமத்துவத்துடனும் நடத்தப்படுகின்றன. முந்தைய அதிமுக அரசு இத்தகைய திட்டங்களை நிறுத்தியது. ஆனால் தி.மு.க. அரசு மீண்டும் இவற்றை தொடங்கியுள்ளது. திராவிட மாடல் அரசின் சாதனைகள், எதிர்க்கட்சியினரின் கண்களை உறுத்துகிறது. ஆனால், மக்கள் இந்த முன்னேற்றங்களைப் புரிந்து, அரசை ஆதரிக்கின்றனர்" என்று பேசியுள்ளார்.
ஜூலை 15 ஆம் தேதி தொடங்கிய 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமின் முதல் கட்டத்தில் இதுவரை சுமார் 17 லட்சம் பேர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இந்த தகவலை உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடர்பாக ஆய்வு நடத்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான் 9 லட்சம் பேர் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன்












Click it and Unblock the Notifications