மாநில உரிமை குறித்து பேசவே பயமா? குரியன் ஜோசப் குழுவை முடக்கும் வேலைகளில் தவெக அரசு.. உதயநிதி கோபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் குழு தொடர்ந்து செயல்பட முடியாத ஒரு முடக்க நிலையைத் தற்போதைய தவெக அரசு உருவாக்கியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ரீல்ஸ் போட்டால் மட்டும் மாநில சுயாட்சியை நிலைநாட்ட முடியாது என்பதை உணர்ந்து, ஒன்றிய - மாநில அரசுகளின் உறவு பற்றி ஆய்வு செய்யும் உயர்நிலைக்குழு, தொய்வின்றி செயல்படுவதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

மாநில உரிமைகளை பாதுகாக்க உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு அப்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழக சட்டசபையில் அறிவித்தார். குரியன் ஜோசப் குழு 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் அறிக்கை அளிக்கும். இறுதி அறிக்கை 2 ஆண்டுகளில் அளிக்கும்.

Udhayanidhi Stalin criticizes Vijay TVK Govt afraid to speak state rights Attempt to stall the Kurian Joseph Committee

குரியன் ஜோசப் குழு

இந்த குழுவில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அசோக் வர்தன் செட்டி, திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். அனைத்து மாநிலங்களின் உரிமை காக்கவே இந்த குழு அமைக்கப்படுகிறது. மாநிலங்களுக்கு உரிய நிதி பகிர்வு வேண்டும் என வலியுறுத்துவது தமிழகத்தின் நலனிற்காக மட்டுமல்ல என்று ஸ்டாலின் கூறியிருந்தார். தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து முந்தைய திமுக அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களையும் கைவிட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்தநிலையில்தான், ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து ஆராய்வதற்காக மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழுவை முடக்கும் வேலைகளில் ஆளுங்கட்சி இறங்கி இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:- ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து ஆராய்வதற்காக நம் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழுவை முடக்கும் வேலைகளில் ஆளுங்கட்சி இறங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது. பணியாளர்கள் பற்றாக்குறையால் இந்தக்குழு தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பயந்து நடுங்கி

இதனால், மாநில சுயாட்சி குறித்த குழுவின் 2-வது ஆய்வு அறிக்கையை தயார் செய்து வந்த ஆய்வாளர்களும் - ஆராய்ச்சி மாணவர்களும் தொடர்ந்து செயல்பட முடியாத சூழலை இந்த டம்மி அரசு உருவாக்கி இருக்கிறது. மாநில உரிமைகள் குறித்து பேசுவதற்கும், போராடுவதற்கும் பயப்படும் த.வெ.க அரசு, அது குறித்து ஆய்வு செய்யவே பயந்து நடுங்கி ஆணையத்தை முடக்குவது வெட்கக்கேடானது.

ரீல்ஸ் போட்டால் மட்டும் மாநில சுயாட்சியை நிலைநாட்ட முடியாது என்பதை உணர்ந்து, மத்திய - மாநில அரசுகளின் உறவு பற்றி ஆய்வு செய்யும் உயர்நிலைக்குழு, தொய்வின்றி செயல்படுவதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+