15 எம்எல்ஏக்கள் வர்றாங்களா? ஆட்டம் காணும் அதிமுக.. அலறும் தவெக.. உதயநிதி ஸ்டாலினுக்கும் ஒரு அட்வைஸ்
சென்னை: அதிமுக என்ற இயக்கம் அழிந்துவிடக் கூடாது என்பதை மக்கள் உணர வேண்டும். இந்த இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றால், அதிமுகவிலிருந்து மேலும் 10 முதல் 15 சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்களுடன் இழுக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். அந்த சூழலைத் தடுத்து நிறுத்துவதற்கான நல்ல சான்ஸ் இந்த இடைத்தேர்தல் மூலம் மக்களுக்குக் கிடைத்துள்ளது என்று தராசு ஷ்யாம் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "சமூக வலைத்தளங்கள் மற்றும் செல்போன் பயன்பாடு மூலமாகவே தவெக விஜய்க்கான கிரேஸூம், செல்வாக்கும் உருவாக்கப்பட்டுள்ளது... முன்பெல்லாம் அச்சு ஊடகங்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 7 சதவீதமாக மட்டுமே இருந்தது. ஆனால், இப்போதள்ள செல்போன் மற்றும் வைஃபை வசதிகள் காரணமாக, சோஷியல் மீடியாவை சமூக பார்த்து கருத்துகளைப் பெறுகிறார்கள். பட்டினப்பாக்கம் விவகாரத்துக்கு, சுரா படத்தின் டயலாக்குகளை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்..

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட விதம் தவறு என்பதை மக்கள் உணர்கிறார்களா இல்லையா என்பதுதான் இங்கு முக்கியமான கேள்வி. விஷயங்களை எளிதில் மறந்துவிடுவது மக்களின் இயல்பு என்பதால், அதை அவர்களுக்குத் தொடர்ந்து ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டியது அரசியல் கட்சிகளின் கடமையாகும்.
அதிமுக என்ற இயக்கம் அழிந்துவிடக் கூடாது என்பதை மக்கள் உணர வேண்டும். இந்த இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றால், அதிமுகவிலிருந்து மேலும் 10 முதல் 15 சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்களுடன் இழுக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். அந்த சூழலைத் தடுத்து நிறுத்துவதற்கான நல்ல சான்ஸ் இந்த இடைத்தேர்தல் மூலம் மக்களுக்குக் கிடைத்துள்ளது. அதை அவர்கள் சரியாக பயன்படுத்துவார்களா என்பது அவர்களின் முடிவைப் பொறுத்தே அமையும்.
திமுக தலைவர் ஸ்டாலின்
தேர்தல் தோல்விக்கு பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் பெரிய அளவில் ஈடுபாடு காட்டவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. திமுகவின் சட்டமன்றச் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் அதிக நேரம் இருக்க வேண்டும். அவர் மிகக் குறைந்த நேரமே அதிகபட்சமாக 2 மணி நேரம் அவையில் இருப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
எ.வ. வேலு போன்ற அமைச்சர்கள் பேசும் விதம் சரியாக இல்லை. தங்கம் தென்னரசு, சிவசங்கர் போன்ற புள்ளிவிவரங்களுடன் சிறப்பாக பேசக்கூடிய மூத்த தலைவர்களையும், புதுக்கோட்டை எம்எல்ஏ போன்ற இளைஞர்களையும் திமுக அதிகமாகப் பயன்படுத்த வேண்டும்.. அவர்களுக்கு உரிய பயிற்சியும் அளிக்க வேண்டும்.
தவெகவின் புதிய எம்எல்ஏ-க்கள்
தவெகவின் புதிய எம்எல்ஏ-க்கள் சிலர் ஆரம்பத்திலேயே தவறாக பேசி கேலிப் பொருளாக மாறினாலும், அடுத்த 6 மாதங்களில் அனுபவம் மூலம் தங்களைத் திருத்திக் கொள்வார்கள். தவெக புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.. ஆனால் திமுக அந்த விஷயத்தில் சற்று பின்தங்கியுள்ளது, அதை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
முதலமைச்சர் எதிலுமே தலையிடாமல், அதிகாரிகள் அவர்கள் இஷ்டத்திற்கு ஆட்சியை நடத்துவது மிகவும் ஆபத்தானது. 1991–96 ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் இதே போன்ற அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்களின் சாம்ராஜ்யமே நிலவியது. ஆனால், கடைசியில் அரசாங்கத்தின் அனைத்துத் தோல்விகளுக்கும் முதலமைச்சரே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
வரலாற்று உதாரணத்தைப் பார்த்தால், 1979-ல் எம்ஜிஆர் ஆட்சியின் போது, அதிகாரிகளின் ஆலோசனையைக் கேட்டு இடஒதுக்கீட்டில் ₹9,000 வருமான உச்சவரம்பு கொண்டுவரப்பட்டது. அது மக்களுக்கு பிடிக்காத முடிவாக மாறியதால், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பெரிய தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.
விஜய் அரசின் குழப்பங்கள்
அதிகாரிகள் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அதற்குச் சாதகமாகவே பேசுவார்கள். ஆட்சி மாறினாலும் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், அரசியல்வாதிகளுக்கு ஆட்சி போனால் அது மிகப்பெரிய இழப்பு. எனவே, அதிகாரிகள் பேச்சை மட்டும் கேட்டு நடக்கும் அரசு உருப்படாது.
விஜய் அரசின் முடிவுகளில் பல குழப்பங்கள் நீடிக்கின்றன. 2023 முதல் நிலுவையில் உள்ள மேல்மா நிலக் கையகப்படுத்தல் பிரச்சனையில், அதை ரத்து செய்வதாக வருவாய்த்துறை தவறாக அறிவித்து, பிறகு சிப்கார்ட் மூலம் திருத்தி அறிவித்த குழப்பம் நிகழ்ந்தது.
அதேபோல், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவது நடைமுறையில் சாத்தியமே இல்லாத ஒன்று. ஏனெனில் அது கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (CRZ) வரம்பிற்குள் வருகிறது.. சுனாமி பாதித்த பகுதி மற்றும் கடலாமைகள் முட்டையிடும் இடம். இதை யார் பரிந்துரை செய்தார்கள் என்பதே சந்தேகமாக இருக்கிறது. இறுதியில் இந்த முடிவை திரும்பப் பெற வேண்டிய நிலைதான் வரும். அப்போது "விஜய் எடுத்த முடிவுகள் எல்லாமே ஆராயாமல் எடுத்த அவசர முடிவு" என்று அனைவரும் விமர்சிக்க தொடங்குவார்கள்.
மதுக்கடைகள் பார்
இதேபோல் மதுவிலக்குக் கொள்கையிலும் குழப்பமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மதுக்கடைகளில் பார் நடத்துவதே தவறு என்ற நிலையில், உணவகங்களுடன் கூடிய பார் (Restro Bar) திறக்கப் போவதாக சொல்வது விதிகளைப் பற்றிய புரிதலற்ற தன்மையைக் காட்டுகிறது.
கூட இருக்கும் அதிகாரிகள் அமைச்சர்களுக்குச் சரியான வழிகாட்டதலைத் தருவதில்லை. அனுபவக் குறைபாடு காரணமாக அவசரப்பட்டு எதையாவது சொல்லி சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்... இதுபோன்ற தவறான அரசாணைகள் நீதிமன்றத்திற்குச் செல்லும்போது சம்மட்டியடி வாங்க நேரிடும், அது அரசுக்குப் பெரிய அவமானமாக முடியும்.
ஒரு கட்சியில் ஜெயித்து வந்த சட்டமன்ற உறுப்பினர்கள், ராஜினாமா செய்துவிட்டு 3 மாதங்களில் வேறு சின்னத்தில் ஓட்டு கேட்பதும் தமிழ்நாடே இதுவரை பார்த்திராத மிகப்பெரிய அசிங்கம் மற்றும் ஜனநாயகச் சீர்கேடாகும்.
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத குதிரை பேரக் கலாச்சாரத்தை விஜய் கொண்டு வந்துவிட்டார். மக்கள் வெறும் 3 மாதங்களிலேயே சுயநலத்திற்காக ராஜினாமா செய்துவிட்டு ஓட்டு கேட்கும் நபர்களுக்கோ அல்லது விஜய் வந்து கையை காட்டிவிட்டார், அஜித்துடன் கார் ரேஸ் ஓடிவிட்டார் என்பதற்கோ வாக்களித்தால் ஜனநாயகத்திற்கு மரியாதையே இல்லாமல் போய்விடும்.
நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட்
விஜய்யை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தியிருக்க வேண்டும், அப்படி செய்யாதது பெரிய தவறு" என்று சொல்வது, நடைமுறையில் சாத்தியமில்லாத ஒரு கற்பனையான விஷயம் மட்டுமே ஆகும்.
எந்தவொரு அரசியல் கட்சியும் தங்களுடைய சொந்தக் கட்சி அடையாளத்தையும், வருங்காலத்தில் மற்ற கட்சிகளோடு கூட்டணி பேசும் அதிகாரத்தையும் விட்டுக்கொடுத்துவிட்டு பொது வேட்பாளருக்கு ஆதரவு தர மாட்டார்கள். நாம் தமிழர் கட்சி அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை நிறுத்தாமல் இருக்க முடியாது.
தவெக, அதிமுக, திமுக ஆகிய 3 கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டும் தேர்தலில் போட்டியிட்டாலே போதுமானது என்றாலும், மற்ற கட்சிகள் தனித்து நிற்பதற்குத் தங்களின் சொந்தக் கட்சியை வளர்க்க வேண்டும் என்ற அரசியல் சுயநலமே காரணம். எதிர்க்கட்சிகள் தனித்தனியாக போட்டியிடும் போது, தவெகவுக்கு எதிரான வாக்குகள் சிதறும்.. அது தவெகவுக்கே சாதகமாக முடியும்.
எனவே, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி வாக்காளர்கள் ஜனநாயகப் படுகொலை மற்றும் குதிரை பேர அரசியலைக் கண்டிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த மக்களுக்குக் கிடைத்துள்ள நல்லதொரு வாய்ப்பாகவே இந்த இடைத்தேர்தலைப் பார்க்க வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
