என்னை சின்னவர் என்று அழைக்காதீர்! பட்டப்பெயர் வைத்து கூப்பிடுவது பிடிக்கவில்லை! உதயநிதி பளிச்!
சென்னை: பட்டப்பெயர் வைத்து தன்னை கூப்பிடுவது தனக்கு பிடிக்கவில்லை என்றும் சின்னவர் என்று அழைக்க வேண்டாம் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார். சென்னையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது அவர் இதனைக் கூறினார். அதன் விவரம் வருமாறு;
''தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று தெரியும், ஆனல் நான் கேட்பது அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது தான். பட்டப்பெயர் வைத்து என்னை அழைப்பது எனக்கு பிடிக்கவில்லை. நான் சின்னவர் தான், உங்களை விட வயதில் சின்னவர். வாழும் பெரியார், இளைய கலைஞர் என்று அழைக்கிறீர்கள். ஆனால் நான் உங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாக இருக்க ஆசைப்படுகிறேன். அது தான் நிரந்தரம், தயவு செய்து பட்டப்பெயரை தவிர்த்து விடுங்கள்.

கடுமையான நிதி நெருக்கடி இருக்கும் போது ஆட்சிக்கு வந்தோம். முதலமைச்சர் முதலில் போட்ட கையெழுத்து பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம். இதன்மூலம் பெண்கள் மாதத்திற்கு ரூ.900 வரை சேமிக்கிறார்கள். வருடத்திற்கு ரூ.12,000 சேமிக்கிறார்கள்.
சிறு சிறு குறைகள் இருக்கும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். சிலருக்கு இன்னும் ரூ.1,000 வரவில்லை என்று சொன்னார்கள். உங்கள் பகுதியில் அதற்கான பட்டியலை தயார் செய்து மாவட்டச் செயலாளரிடம் வழங்குங்கள். அதைச் சரி செய்யும் பணியில் நான் இறங்குகிறேன். 90% மக்களுக்கு இந்த ரூ.1,000 சென்று விட்டது.
உருட்டல் மிரட்டலுக்கு பயப்பட திமுக அடிமை கூட்டம் கிடையாது. திமுக எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. எங்களுக்கு ஒன்றே குலம் ஒருவனே தேவன். நான் கலைஞரின் பேரன். ஜாதி, மதம் கிடையாது, அனைவரும் சமம் என்று தான் நான் பேசினேன். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக கைதாக போகிறார்கள். 2021 தேர்தலில் அடிமைகளை துரத்தி வீட்டுக்கு அனுப்பினோம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டி அடிப்போம்.''
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி












Click it and Unblock the Notifications