உதயநிதி தான் விஜய்க்கு அரசியல் வில்லன்.. அதிமுக தவெக கூட்டணியால் விபரீதம்! ராஜநாயகம் சொல்லும் காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய்க்கு அரசியல் எதிரி ஸ்டாலின் இல்லை எனவும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் தான் எதிரியாக உள்ளார் எனவும், விஜய்க்கு சரியான அரசியல் எதிரி உதயநிதி ஸ்டாலின் தான் எனக் கூறியிருக்கிறார் பேராசிரியர் ராஜநாயகம். மேலும், அதிமுக - தவெக கூட்டணி சேர்ந்தால் விபரீதம் நடக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஒன் இந்தியா அரசியலுக்கு பேட்டியளித்துள்ள அவர்," 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிமுக தவிர்த்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையும் என பேசப்படுகிறது. ஆனால் திமுக அதிமுக அல்லாத பிற கட்சிகள் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி சேர்ந்தாலும் வெற்றி பெற முடியாது.

Udhayanidhi Stalin Vijay Rajanayakam

ஆட்சி அமைப்பது என்று இல்லை எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியாது. 2016 தேர்தலில் மக்கள் நல கூட்டணி அமைந்தது அதன் முடிவுகள் எப்படி இருந்தது என்பது அனைவருக்குமே தெரியும். இருந்த கொஞ்சம் நஞ்ச வாக்குகளையும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இழந்துவிட்டன. தற்போதைய சூழல் அப்படியே தொடர்ந்தால் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஏழு விழுக்காடு வாக்குகளை பெறும்.

Udhayanidhi Stalin Vijay Rajanayakam

தற்போது விஜயின் செயல்பாடுகள் வேகம் இடத்திற்கும் இடையில் சினிமா வேலைகளை தாண்டி கள அரசியலுக்கு திரும்பினால் இந்த வாக்கு சதவீதம் சற்று அதிகரிக்கலாம். ஒரு படத்தில் ஹீரோ பலமாக இருக்க வேண்டும் என்றால் அவருக்கு இணையாக பலம் பெற்ற வில்லன் இருக்க வேண்டும். அப்படி பார்க்கும்போது ஸ்டாலின் விஜய்க்கு அரசியல் எதிரி கிடையாது. அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் தான் சரியான அரசியல் எதிரியாக இருக்க முடியும்.

Udhayanidhi Stalin Vijay Rajanayakam

முதலமைச்சர் ஸ்டாலின் இமேஜ் முழுமையாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. அதே நேரத்தில் வில்லன் என சித்தரிக்க கூடிய வகையிலும் இல்லை. அதனால் விஜயோ எடப்பாடியோ எதிர்க்கும் வில்லன் வீக்காக இருக்கிறார். அதனால் முதலில் வில்லனை ஸ்ரட்ராங் ஆக்க வேண்டும். அதற்கு பிறகு எதிர்த்தால் தான் ஹீரோ வெற்றி பெற முடியும். உதயநிதி ஸ்டாலின் விஜய் நேருக்கு நேர் போட்டி போட்டால் விஜய் வெற்றி பெற 60 சதவீதமும், வெற்றி பெற 40% வாய்ப்பு உள்ளது ஒட்டுமொத்த அரசியலும் அனைத்து கணிப்புகளும் மாறும்." என்றார்.

மேலும், இது மட்டும் அல்லாமல் தமிழக அரசியல் களம் அதிமுக தமிழக வெற்றி கழக கூட்டணியால் ஏற்படும் விபரீதம் காங்கிரஸ் கட்சியின் இளமை கடந்த கால தேர்தல் வரலாறு என பல விஷயங்களை பேராசிரியர் ராஜநாயகம் பகிர்ந்து கொண்டுள்ளார்..

முழு வீடியோவைப் பார்க்க..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+