Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்கள் வாழ்த்து தான் நான் உழைப்பதற்கான எரிபொருள்! உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சிக் கடிதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்கள் வாழ்த்து தான் நான் உழைப்பதற்கான எரிபொருள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சிக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தன்னை பொறுத்தவரை பிறந்த நாள் என்பது ஆண்டுதோறும் வரும் இன்னொரு நாள்தான் என்றும் ஆனால், அதை நம் சுற்றமும் சூழலும் சேர்ந்து வாழ்வில் மறக்கமுடியாத சிறந்த நாளாக மாற்றுவதை நினைக்கையில் மகிழ்வாகவும் நெகிழ்வாகவும் இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Udhayanidhi Stalin letter about his birthday celebration

பெரியார் திடலில் இனமான ஆசிரியர் அய்யா அவர்களை சந்தித்து வாழ்த்துபெறச் சென்றிருந்தபோது, 'திராவிட இயக்கக் கொள்கை ஜீவநதி உதயநிதி அவர்களுக்கு வாழ்த்துகள்' என்று இன்றைய விடுதலை நாளிதழில் அவர் தந்திருந்த என் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியை என்னிடம் காண்பித்து மகிழ்ந்தார்.

என்னுடைய கொள்கைப் பிடிப்பை வரிக்கு வரி பாராட்டி எழுதியிருந்த ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன். அந்த வாழ்த்துச் செய்தியின் கடைசிவரியை, 'வயது ஏறுவது அவருக்கு மூப்பு அல்ல முதிர்ச்சியே' என்று முடித்திருந்தார். இதை வாழ்த்துக் கடிதம் என்பதைவிட, பெரியார் பேரனுக்கான பாடமாகவே எடுத்துக்கொள்கிறேன். இனமான ஆசிரியர் அவர்களுக்கு இனமான மாணவனின் நன்றி.

என் பிறந்தநாளை சிறந்த நாளாக்குவதில் அமைச்சர் அண்ணன் சேகர்பாபு அவர்களும் ஒருவர். என் பிறந்தநாளை முன்னிட்டு கழக மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழி, மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்விக்கான ஊக்கத்தொகையை, பெரியார் திடலில் என் கைகளால் வழங்க வைத்த அவருக்கு என் அன்பும் நன்றியும். அதன்பின்னர் கலைஞருடைய கோபாலபுரம், சி.ஐ.டி. காலனி இல்லங்களுக்குச் சென்று பாட்டிகளிடமும் கழகத் துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அத்தை கனிமொழி அவர்களிடமும் வாழ்த்து பெற்றேன்.

அதைத் தொடர்ந்து என் தொகுதியில் நான் கலந்துகொண்ட இரு நிகழ்ச்சிகள் என் வாழ்கையில் மறக்கமுடியாத நிகழ்வாக, என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய நிகழ்ச்சிகளாக அமைந்தன. ஒன்று சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் சிலைத் திறப்பு விழா. வி.பி.சிங் அவர்கள் என் மனதுக்கு நெருக்கமான தலைவர்களில் ஒருவர். அவருடைய சிலை, அவருடைய நினைவு நாளான இன்று, என்னுடைய சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைத்து, என் தொகுதிக்கு மேலும் பெருமை சேர்த்துத் தந்துள்ளார் முதலமைச்சர்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வி.பி.சிங் அவர்களின் சிலை, தமிழ்நாட்டில் அமைக்கப்படுவது ஏன்? என்று, ஒவ்வொரு இந்தியனும் தங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டால், அவரின் சிலை ஒவ்வொரு மாநிலத்திலும் அல்லவா அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் எழும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசுப் பணிகளில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பி.பி.மண்டல் தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரையைச் செயல்படுத்தி சமூக நீதியை நிலைநாட்டிய வி.பி.சிங் அவர்களுக்குக் கலைஞருடைய இடத்தில் இருந்து நம் முதலமைச்சர் அவர்கள் அந்தச் சிறப்பைச் சேர்த்துள்ளார்கள்.

குறிஞ்சி இல்லத்தில் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்பட கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் 3 தலைவர்கள், திரைத்துறையினரின் வாழ்த்தைப் பெற்றேன். கழகத்தினர் நீண்ட வரிசையில் காத்திருந்து, என்னை வாழ்த்தி மகிழ்ந்தனர். கழகத்தினர் பொன்னாடை, பூங்கொத்துகளை அன்பளிப்பாகத் தருவதைத் தவிர்க்கவேண்டும் என்பதற்காக, இல்லம் அருகிலேயே மகளிர் சுயஉதவிக்குழுவின் 'மதி தயாரிப்பு' பொருட்களின் விற்பனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதன் பிறகு கழக நிர்வாகிகள் இளைஞர் அணி சகோதரர்களுடன் மதிய உணவு உண்டு மகிழ்ந்தேன். கழகத்தினர் எனக்கு வழங்கிய 'மதி தயாரிப்பு' பொருட்களை என் தொகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று வழங்கி மகிழ்ந்தேன். கழகத் தலைவர், பொதுச் செயலாளர், முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், முத்தமிழறிஞர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மக்கள், கழக இளைஞர் அணியைச் சேர்ந்த சகோதரர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர், அய்யா ஆசிரியர், அண்ணன் கே.எஸ்.அழகிரி, அண்ணன் வைகோ, அண்ணன் திருமாவளவன், அண்ணன் பாலகிருஷ்ணன், அண்ணன் முத்தரசன், அண்ணன் ஜவாஹிருல்லா, அண்ணன் அப்துல் சமது, அண்ணன் திருநாவுக்கரசர், அண்ணன் பீட்டர் அல்போன்ஸ், அண்ணன் செல்வப்பெருந்தகை, சகோதரர் துரை வைகோ,

Udhayanidhi Stalin letter about his birthday celebration

சூப்பர் ஸ்டார் ரஜினி சார், உலக நாயகன் கமல் சார், சத்யராஜ் சார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சார், இயக்குநர்கள் அருண்ராஜா காமராஜ் சார், மாரிசெல்வராஜ் சார், சகோதரர்கள் சிவகார்த்திகேயன், சந்தானம், சூரி மற்றும் கீர்த்தி சுரேஷ், முரளி ராமசாமி உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்... இப்படி நேரிலும் அலைபேசியிலும் வாழ்த்தியவர்கள், சமூக வலைத்தளங்களின் வாயிலாக வாழ்த்தியவர்கள் என அனைவருக்கும் என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

குறிஞ்சி இல்லத்தில் தொண்டர்களின் வாழ்த்துக்களைப் பெற விரிவான ஏற்பாடுகளை செய்திருந்த மாவட்ட கழகச் செயலாளர்கள் சகோதரர் சிற்றரசு, அண்ணன் மயிலை வேலு ஆகியோருக்கும் நன்றி.

பிறந்த நாள் வாழ்த்துகளை, நான் மென்மேலும் உற்சாகத்துடன் உழைப்பதற்கான எரிபொருளாகவே எடுத்துக்கொள்கிறேன். பாசிச சக்திகளை வீட்டுக்கு அனுப்ப, 'இந்தியா கூட்டணி'யின் ஒற்றுமையை, சக்தியை உலகுக்குப் பறைசாற்றும் வகையில், மாநில உரிமை மீட்பு முழக்கத்துடன் சேலத்தில், வரும் டிசம்பர் 17-ஆம் தேதி நாம் முன்னெடுக்கும் கழக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டின் வெற்றிக்காக உழைக்க உறுதியேற்போம். வாழ்த்திய அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+