3 வருடமாக செங்கல்லை காட்டுகிறார் உதயநிதி.. நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டியதுதானே.. எடப்பாடி அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கல்லை ரோட்டில் காட்டி ஒரு பிரயோஜனமும் இல்லை. நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டும். இந்த செங்கல்லை கொண்டு போய் நாடாளுமன்றத்தில் காட்டி நீதியை பெற்று எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி இருக்கலாம் என்று அதிமுக வேட்பாளர் அறிமுக விழாவின் போது எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக தனி கூட்டணியில் தேர்தலை சந்திக்கிறது. தொகுதி பங்கீடு, வேட்பாளர்களை அறிவித்த அதிமுக இன்று கூட்டணி கட்சிகள் உள்பட 40 தொகுதிகளில் போட்டியிடும் தொகுதி வேட்பாளர்களை ஒரே மேடையில் இன்று எடப்பாடி பழனிசாமி அறிமுக செய்து வைத்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

Udhayanidhi Stalin lifts brick for publicity Admk Edappadi Palaniswami slams DMK


தமிழகத்தில் ஒரு மருத்துவக்கலூரியை ஸ்டாலினால் கொண்டு வர முடிந்ததா? எப்போ பார்த்தாலும் உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கல்லை எடுத்துக் கொண்டு இருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை வைத்தார். எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து கட்ட வேண்டும் என்று நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தோம்.

ஆனால், திமுக என்ன செய்தது. செங்கல்லை ரோட்டில் காட்டி ஒரு பிரயோஜனமும் இல்லை . நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டும். விளம்பரத்திற்காக செங்கல்லை தூக்கி காட்டுகிறார்கள். 38 எம்பிக்கள் உங்களுக்கு கிடைத்தது. இந்த செங்கல்லை கொண்டு போய் நாடாளுமன்றத்தில் காட்டி நீதியை பெற்று எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி இருக்கலாம்.

உங்களுக்கு தில்லு, தெம்பு, திராணி இல்லை.. கேக்க வேண்டிய இடம் நாடாளுமன்றம்.. அதற்காகத்தான் மக்கள் உங்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள். அங்கே வாய்மூடி மவுனமாக இருந்துவிட்டு... இங்கே வந்து செங்கல்லை தூக்கி காட்டுகிறார்கள். உண்மையாகவே எய்ம்ஸ் விரைவாக கட்ட வேண்டும் என்று அக்கறை இருந்தால் நாடாளுமன்றத்தில்தான் குரல் கொடுத்து இருக்க வேண்டும்.

அதற்கு திராணி இல்லை. ஆனால், இங்கே வந்து வித்தை காட்டுகிறார்கள். தமிழக மக்கள் அறிவாளிகள்.. நீட் தேர்வை யார் கொண்டு வந்தது.. 2010 டிசம்பரில் மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி கொண்டு வந்தது. நீட் தேர்வை கொண்டு வந்தது திமுகதான்.. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவித இட ஒதுக்கீட்டை அதிமுக கொண்டு வந்தது. இதுதான் சாதனை...

வெற்று அறிவிப்புகள் மூலம் திமுக மக்களை ஏமாற்ற முடியாது. திமுக ஒரு குடும்ப கட்சி.. அது ஒரு கார்பரேட் கம்பெனி. மத்தியில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து அங்கேயே கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் திமுக இவ்வளவு கஷ்டப்படுகிறது. திமுகவிற்கு அதிகாரம் தான் முக்கியம்.. நாட்டு மக்கள் முக்கியம் அல்ல.. விவசாயிகள் வடிக்கும் கண்ணீர் உங்களுக்கு தோல்வியை கொடுக்கும்.

மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு துடித்துக்கொண்டு இருக்கிறது. கர்நாடக அமைச்சர் சொல்கிறார்.. ஒரு சொட்டு கூட தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்கு கொடுக்க முடியாது என்று. நமது முதல்வர் வாயே திறக்கவில்லை. தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் ஸ்டாலினுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியின் போது இப்படிப்பட்ட பிரச்சினை வந்தது.. அப்போது உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தினோம். இவ்வாறு எடப்படி பழனிசாமி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+