உதயநிதி ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்.. திமுகவின் அடுத்த அதிரடி விரைவில் வெளியாகும்.. செம எதிர்பார்ப்பு
உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசை விமர்சித்து பேட்டி தந்துள்ளார்
சென்னை: மத்திய பாஜக பாசிச ஆட்சியை எதிர்த்து கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை எங்கள் ஆர்ப்பாட்டம் நிற்காது.. அது மேலும் மேலும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்... மேலும், திமுக அடுத்து வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு குறித்தும் உதயநிதி தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் செயல்பாடுகளை கண்டித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் தமிழகம் முழுவதும் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது..

வேளாண் சட்டங்கள்
மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மறுப்பது, மத்திய அரசின் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்தும் வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார சீரழிவு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இளைஞரணி நிர்வாகிகள்
உதயநிதி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திருவிக தொகுதி எம்எல்ஏ தாயகம் கவி, விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர் ராஜா, மயிலாப்பூர் எம்எல்ஏ மயிலை தா.வேலு, திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு, மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டம்
ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, "நாங்கள் எதிர்கட்சியாக இருந்தபோதும் போராடி கொண்டுதான் இருந்தோம்.. இன்று ஆளும் கட்சியாக இருந்தாலும் போராடி கொண்டுதான் இருக்கிறோம்.. காரணம், எங்கள் போராட்டம் மக்களுக்கானது.. வேளாண் சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு தந்துள்ளோம்.

மத்திய அரசு
தற்போது, நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை தொடர்ச்சியாக செய்து வருகிறது.. உடனடியாக இதை மத்திய அரசு கைவிட வேண்டும்.. மத்திய பாஜக பாசிச ஆட்சியை எதிர்த்து கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை எங்கள் ஆர்ப்பாட்டம் நிற்காது.. அது மேலும் மேலும் தொடர்ந்து கொண்டே இருக்கும்..
Recommended Video

வாக்குறுதிகள்
தேர்தல் அறிக்கையில் நாங்கள் சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றி கொண்டு வருகிறோம்.. மகளிருக்கான இலவச பேருந்து, கொரோனா நிவாரண நிதியாக 4ஆயிரம் ரூபாய், பெட்ரோல் மீது 3 ரூபாய் கலால் வரி குறைக்கப்பட்டது உட்பட எத்தனையோ நிறைவேற்றினோம்.. அடுத்தபடியாக, திமுக அறிக்கையில் கேஸ் விலையில் இருந்து 100 ரூபாய் குறைப்பதற்கான வழியையும் விரைவில் தமிழக அரசு செயல்படுத்தும்" என்றார்.
-
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications