எனது மகன் இன்பா ஒரு கால்பந்தாட்ட வீரர்! தந்தையாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
தனது மகன் ஒரு விளையாட்டு வீரர் என பெருமிதமாக கூறிய உதயநிதி.
சென்னை: மாநிலங்களுக்கு இடையேயான டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளை சென்னையில் தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது மகன் இன்பநிதி ஒரு கால்பந்தாட்ட வீரர் என பெருமிதத்துடன் கூறினார்.
பொது நிகழ்ச்சி ஒன்றில் முதல்முறையாக தனது மகனின் பெயரை குறிப்பிட்டு அவர் ஒரு விளையாட்டு வீரர் என்பதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், என மூவருமே சினிமா, அரசியல் ஆகிய 2 துறைகளில் மட்டுமே ஈடுபாடு காட்டிய நிலையில் இன்பநிதி விளையாட்டுத்துறையில் ஈடுபாடு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஷிப் போட்டிகள்
8-வது மற்றும் 25-வது தேசிய அளவிலான செவித்திறன் குன்றியவர்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டிகள் 2023 பிப்ரவரி 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நடைப்பெறுகிறது. இந்திய தேசிய விளையாட்டு கூட்டமைப்பின்(National sports federation of india) அங்கீகாரம் பெற்ற அகில இந்திய செவித்திறன் குன்றியவர்களுக்கான கவுன்சில் (All india sports council of deaf) சார்பில் தடகளம், நீச்சல், கூடைப்பந்து, வாலிபால், டென்னிஸ், கால்பந்து, டேபிள் டென்னிஸ், மற்றும் இறகுப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது.

ரூ. 3 லட்சம் காசோலை
இந்த போட்டிகளில் ஜுனியர் பிரிவில் 27 ஆண்கள் மற்றும் 23 பெண்கள் உட்பட 50 வீரர் - வீராங்கனைகள் மற்றும் சீனியர் பிரிவில் 65 ஆண்கள் மற்றும் 15 பெண்கள் உட்பட 80 வீரர் - வீராங்கனைகள் சேர்த்து மொத்தம் 130-பேர் பங்கேற்க உள்ளனர். மேலும் 15 பயிற்ச்சியாளர்கள் மற்றும் மேலாளர்கள் செல்கின்றனர். இந்த போட்டிகளில் கலந்து கொள்ளச் செல்லும் வீரர் - வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நிதி உதவியாக ரூபாய் 3 லட்சத்திற்கான காசோலையினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மகன் இன்பநிதி
முன்னதாக மாநிலங்களுக்கு இடையேயான டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளை சென்னையில் தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டேபிள் டென்னிஸ் விளையாட்டு பற்றி தனது அனுபவங்களை பகிர்ந்தார். அப்போது தனது மகன் இன்பநிதியின் பெயரை குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், தனது மகன் இன்பா ஒரு கால்பந்தாட்ட வீரர் என பெருமிதத்துடன் கூறினார். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், என மூவருமே சினிமா, அரசியல் ஆகிய 2 துறைகளில் மட்டுமே ஈடுபாடு காட்டிய நிலையில் இன்பநிதி விளையாட்டுத்துறையில் ஈடுபாடு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தேவநாதன் யாதவ்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த தேவநாதன் யாதவ், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் இந்த நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications