உதயநிதி ஸ்டாலினுக்கு விஜய் பதிலடி என்ன? இன்று திமுக இதைதான் செய்யுமா? இந்த 4 விஷயம்தான் முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதிலுரை வழங்க போகிறார்.. எனவே தமிழக அரசியலில் இன்று முக்கியமான நாளாக மாறியுள்ளது. காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்குகிறார். ஆனால் இது சாதாரண பதிலுரை இல்லை. கடந்த வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய பல கேள்விகளுக்குத்தான் விஜய் இன்று பதில் சொல்லப் போகிறார். அதனால் விஜய் என்ன பேசப் போகிறார் என்பதுடன், திமுக என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் என்ன கேட்டார்? விஜய் அரசு ஆட்சிக்கு வந்த 116 நாட்களில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதுதான் எதிர்க்கட்சி தலைவரின் முக்கிய கேள்வி.

Vijay Udhayanidhi Stalin Assembly Debate Vijay Reply Today DMK Walkout Today

கொலைகள், பாலியல் குற்றங்கள், காவல், லாக்கப் மரணங்கள் என பல சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள், போராட்டங்களை கையாளும் முறை உள்ளிட்ட பல விஷயங்களையும் கேள்விக்கு உட்படுத்தினார். "எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல வேண்டும்" என்பதும் உதயநிதியின் வாதமாக இருந்தது.

இதற்குத்தான் விஜய் இன்று பதில் சொல்லப் போகிறார். அதனால்தான் அவர் ஏற்கனவே, "அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதில் சொல்கிறேன்" என்று கூறியுள்ளார். மேலும், தான் பதில் சொல்லும்போது யாரும் எழுந்து வெளியே செல்லக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

அப்படியானால் விஜய் என்ன பேசுவார்?

முதலில் உதயநிதி சொன்ன ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் விஜய் விளக்கம் கொடுக்கலாம்... எந்த சம்பவத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது, காவல்துறை எப்படி செயல்பட்டது என்பதை முதலமைச்சர் விரிவாக சொல்லலாம். பிறகு, திமுக ஆட்சியில் இருந்தபோது நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை விஜய் எடுத்துச் சொல்லும் வாய்ப்பும் இருக்கிறது. "அப்போது என்ன நடந்தது? என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?" என்று திமுகவை நோக்கி கேள்விகளை திருப்பலாம்.

அதே நேரத்தில், "கடந்த ஆட்சியைப் பற்றி பேசுகிறீர்கள், உங்கள் ஆட்சியில் இந்த 116 நாட்களில் என்ன செய்தீர்கள்?" என்ற கேள்விக்கு விஜய் பதில் சொல்ல வேண்டிய நிலையும் உள்ளது. அதனால் இன்று அவர் திமுகவை மட்டும் விமர்சிக்காமல், தனது அரசு செய்த வேலைகளையும் லிஸ்ட் போட வேண்டியிருக்கலாம்.

திமுக என்ன செய்யும்?

அதேபோல, முதலமைச்சர் விஜய் பேசும்போது திமுக உறுப்பினர்கள் குறுக்கிட்டு பேசுவார்களா? கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பார்களா? அல்லது மீண்டும் வெளிநடப்பு செய்வார்களா? என்பதுதான் அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது..

கடந்த முறை விஜய்யின் சில கடுமையான கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர். அதனால் இன்று மீண்டும் வெளிநடப்பு நடந்தால், அது விஜய்க்கு அரசியல் ரீதியாக பிளஸ் பாயிண்ட்டாக மாறக்கூடும். "விஜய் பேச வேண்டும் என்று கேட்கிறார்கள், அவர் பேச ஆரம்பித்ததும் வெளியேறுகிறார்கள்" என்று தவெக தரப்பில் விமர்சனம் நிச்சயம் எழவே செய்யும்.

அதனால் இந்த முறை திமுக வேறு முடிவையும் எடுக்கலாம்.. அதாவது, விஜய் முழுமையாக பேசட்டும் என்று அமைதியாக இருந்து, அவர் சொல்லும் ஒவ்வொரு விஷயத்திற்கும் பிறகு பதிலடி தரலாம்.. எப்படிப்பார்த்தாலம், வெளிநடப்பு செய்தாலும் விமர்சனம் வரும், வெளியேறாமல் இருந்தால் விஜய்யின் பேச்சை முழுமையாக கேட்டு, தக்க பதிலை சொல்ல வேண்டிய நிலை வரும்.

இன்று திமுக என்ன செய்யும்?

இப்படி எத்தனையோ யூகங்கள் இப்போதே இறக்கை கட்டி பறந்து கொண்டிருக்கின்றன.. அதனால்தான், சட்டப்பேரவையை இன்று நேரில் பார்க்க பொதுமக்கள், குறிப்பாக மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. விஜய்யின் பதிலுரையை பார்க்க சட்டப்பேரவை பார்வையாளர் மாடத்திற்கான இடங்களும் வேகமாக நிரம்பியுள்ளன.

மொத்தத்தில் இன்று 4 கேள்விகளுக்கு பதில் தெரியவேண்டியிருக்கிறது.. உதயநிதி கேட்ட கேள்விகளுக்கு விஜய் என்ன பதில் சொல்கிறார்? கடந்த திமுக ஆட்சியின் கணக்கை அவர் கேட்கிறாரா? தனது 116 நாள் ஆட்சிக்கு என்ன விளக்கம் கொடுக்கிறார்? அதற்கு திமுக உடனடியாக பதில் சொல்கிறதா? மீண்டும் வெளிநடப்பு செய்கிறதா? இந்த கேள்விகளுக்கான பதில்தான் இன்று சட்டப்பேரவையின் அரசியல் சூட்டை தீர்மானிக்கப் போகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+