"உனக்கு கொடுத்தது பதவி அல்ல".. அப்போ ஸ்டாலினிடம் கருணாநிதி சொன்னதை! மறக்காமல் திருப்பி சொன்ன உதயநிதி
சென்னை: 1996ல் ஸ்டாலினிடம் அப்போதைய முதல்வர் கருணாநிதி சொன்ன விஷயத்தை இப்போது இத்தனை வருடங்கள் கழித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நினைவு கூர்ந்து உள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ இன்று தமிழ்நாடு அமைச்சராக பதவி ஏற்று உள்ளார். இன்று இவருக்கு விளையாட்டு, இளைஞர் நலன் ஆகிய துறைகள் இன்று அளிக்கப்பட்டு உள்ளது.
இதில் கடவுளின் பெயரில் பதவி ஏற்பேன் என்று சொல்லாமல் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். அதன்பின் ரகசிய காப்பு பிரமாணத்தில் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து போட்டார்.

அமைச்சர்
இந்த நிலையில் இன்று அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் முக்கியமான பழைய வரலாறு ஒன்றை நினைவு கூர்ந்து உள்ளார். 1996ல் ஸ்டாலினிடம் அப்போதைய முதல்வர் கருணாநிதி சொன்ன விஷயத்தை இப்போது இத்தனை வருடங்கள் கழித்து உதயநிதி ஸ்டாலின் நினைவு கூர்ந்து உள்ளார். 1996ல் சென்னையின் மேயராக இப்போதைய முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். பிற்பகலில் ஸ்டாலின் மேயர் ஆவது உறுதியானது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில்தான் ஸ்டாலின் அப்போது மேயர் ஆனார். இதையடுத்து வெற்றியோடு அப்போதைய முதல்வர் கருணாநிதியை சந்திக்க சென்றார்.

பதவி ஏற்பு
சென்னையில் முதல் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் ஸ்டாலின்தான். இந்த செய்தியை மகிழ்ச்சியோடு சொல்ல சென்ற ஸ்டாலின்.. எனக்கு கொடுத்த பதவியை சிறப்பாக செய்வேன். மக்கள் கொடுத்த பதவியை வைத்து மக்களுக்கு சேவை செய்வேன் என்று குறிப்பிட்டார். இதை கேட்ட அப்போதைய முதல்வர் கருணாநிதியின் முகம் சட்டென மாறியது. தன் மகன் ஸ்டாலினை நோக்கி.. உனக்கு மக்கள் கொடுத்து இருப்பது பதவி அல்ல.. மேயர் என்பது பதவி அல்ல.. அது மேயர் பொறுப்பு.. அதை பொறுப்பாக செய். பதவியாக நினைக்காதே என்று கூறினார்.

நகரசபை தேர்தல்
சமீபத்தில் தமிழ்நாட்டில் நகரசபை தேர்தல் முடிந்த பின் நடந்த பயிற்சி கூட்டத்தில் கூட முதல்வர் ஸ்டாலின் இதை நினைவு கூர்ந்து இருந்தார். 1996ல் ஸ்டாலினிடம் அப்போதைய முதல்வர் கருணாநிதி சொன்ன விஷயத்தை இப்போது இத்தனை வருடங்கள் கழித்து உதயநிதி ஸ்டாலின் இன்று நினைவு கூர்ந்து உள்ளார்.இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் செய்துள்ள ட்விட்டில், எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன், என்று கூறி உள்ளார்.

உதயநிதி நினைவு கூர்ந்தார்
இதில் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் என்பதை பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன் என்று குறிப்பிட்டு உள்ளார். பழைய பதவி - பொறுப்பு என்ற வித்தியாசத்தை இப்போது நினைவு கூர்ந்து இருக்கிறார். உதயநிதி இப்படி பழையதை நினைவு கூர்ந்து பேசியது பலரின் கவனத்தை ஈர்த்து உள்ளது. தனது அமைச்சர் பதவி குறித்து பேட்டி அளித்த அவர், வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றி,. விமர்சனங்களுக்கு செயல் மூலம் பதில் தருவேன். முடிந்தவரை அமைச்சர் பதவியில் சிறப்பாக செயல்படுவேன். தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைப்போம். விளையாட்டு தலைநராக தமிழகத்தை உருவாக்குவோம். இனி சினிமாவில் நடிப்பது இல்லை. மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்த மாமனிதன் கடைசி திரைப்படம். நடிகர் கமல்ஹாசன் திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது கைவிடப்பட்டது, என்று கூறியுள்ளார் .












Click it and Unblock the Notifications