அது என்னங்க அப்பன் என சொல்வது கெட்ட வார்த்தையா.. நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி கேள்வி
சென்னை: அப்பன் என சொல்வது கெட்ட வார்த்தையா என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
வட தமிழகத்தில் மிக்ஜாம் புயல் கடுமையாக சேதத்தை ஏற்படுத்தி சென்றுவிட்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகிறார்கள். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மத்திய அரசிடம் ரூ 5000 கோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டிருந்தார்.

ஆனால் மத்திய அரசோ வெறும் ரூ 450 கோடியை மட்டுமே வழங்கி இருந்தது. இதனைத் தொடர்ந்து திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்தன. இந்தியாவிலேயே அதிகமாக ஜிஎஸ்டி செல்லும் மாநிலமாக தமிழகம் இருக்கும் போதிலும் ஏதோ பிச்சை கேட்பது போல மத்திய அரசு நடந்து கொள்கிறது என அமைச்சர்கள் விமர்சித்தனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஒருவர் கேட்கும் போதெல்லாம் கொடுக்க நாங்கள் என்ன ஏடிஎம்மா என கேட்டிருந்தார். இதனால் கடுப்பான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாங்கள் என்ன உங்கள் அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறோம். எங்கள் வரிப்பணத்தைதானே கேட்கிறோம் என தெரிவித்திருந்தார்.
இதற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் பெரும் வெள்ள பாதிப்புகளை சந்தித்த தென் மாவட்டங்களில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் தமிழக அரசு மீது சரமாரியாக விமர்சனங்களை முன் வைத்தார்.
அவர் கூறுகையில், வெள்ள தடுப்பு பணிகள் 92 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டதாக முன்னர் கூறிவிட்டு தற்போது 42 சதவீதம்தான் செலவழித்தோம் என மாற்றி பேசுகிறார் ஒரு அமைச்சர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு வானிலை மையம் மீது குற்றம் சாட்டுவது ஏன். இன்ச் பை இன்ச்சாக கணிக்க முடியாது.
மாநில அரசிடம் இருந்து கோரிக்கை வைக்கப்படுவதற்கு முன்பாகவே மீட்பு பணிக்கான அனைத்து உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன. வானிலை முன்னெச்சரிக்கை முறையாக வழங்கப்பட்டது. ஆனால் தென் மாவட்ட பொறுப்பு தமிழக அமைச்சர்களும், அதிகாரிகளும் எப்போது பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றனர்?
உதயநிதியின் பாஷை எப்போதும் அப்படித்தான் இருக்கும். சனாதன தர்மத்தின் போதும் அதை அழிக்க வரவில்லை, ஒழிக்கவே வந்தோம் என உதயநிதி பேசியவர்தானே. அவுங்க அப்பன் வீட்டு பணமா என உதயநிதி கேட்கிறார். அவுங்க அப்பன் வீட்டுச் சொத்தை வைத்துக் கொண்டு பதவி அனுபவித்து கொண்டு இருக்கிறாரா, அப்படினு கேட்க முடியுமா. அவுங்க தாத்தா எப்பேர்பட்ட தமிழறிஞர், எனவே உதயநிதி பதவிக்கு ஏற்ற மாதிரி பேச வேண்டும் என நிர்மலா சீதாராமன் அறிவுரை வழங்கினார்.
இந்த நிலையில் நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். சென்னை கோட்டூபுரத்தில் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துவிட்டு செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அப்பன் என சொல்வது கெட்ட வார்த்தையா, மத்திய நிதியமைச்சர் உள்பட யாரையும் நான் மரியாதை குறைவாக பேசவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் சில பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. நிவாரண பணிகள் எல்லாம் நடந்து வருகின்றன என்றார் உதயநிதி.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications