வெயில் வாட்டி வதைக்குது.. உடனே இதை பண்ணுங்க.. உதயநிதி ஸ்டாலினின் “கூல்” அட்வைஸ்!
சென்னை: தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தி வருவதோடு, வெப்ப அலையும் வீசி வரும் நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் இந்த கோர தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக இளநீர், தர்பூசணி, மோர், நுங்கு, பழச்சாறு உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சியை தரும் பொருட்களை பொதுமக்கள் வாங்கி சாப்பிடுகின்றனர். அதனால், இவற்றின் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

வழக்கமாக, கோடை காலத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இலவச நீர் மற்றும் மோர் பந்தல் அமைப்பது வாடிக்கை. இந்த முறை அவை பெருமளவில் குறைந்துள்ளன.
நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்படாததால் மக்கள், பகல் நேரத்தில் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அதோடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் குடிப்பதற்கு நீர் இன்றி வெயிலில் அலைவதையும் காண முடிகிறது.
இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில், "தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. 'வெப்ப அலை வீசக்கூடும்' என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த கடும் வெயில் காலத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க, நீர் - மோர் பந்தல்களை அமைப்பதுடன், கால்நடைகள் எளிதில் நீர் பருகுவதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்போம். கோடைக் காலங்களில் ஏற்படும் உடல் நலக்குறைவை தவிர்க்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, விழிப்புணர்வுடன் செயல்படுவோம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications