கோபாலபுரத்துக்காரன் நான்.. தோற்று போன "ஆழ்வார்பேட்டை" அரசியல்.. யாரை சொல்கிறார் உதயநிதி
உதயநிதி ஸ்டாலின் கோபாலபுரத்தை பற்றி பெருமையுடன் பேசினார்
சென்னை: "ஆழ்வார்பேட்டையில் இருந்தவர்கள் அரசியலில் தோல்வியடைந்து விட்டனர்.. ஆனால் என்னுடைய வீடு ஆழ்வார்பேட்டையில் இருந்தாலும், நான் பிறந்தது எல்லாமே கோபாலபுரம் தான்... எப்பவுமே நான் கோபாலபுரத்துக்காரன்தான்" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளரும், சென்னை சேப்பாக்கம் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினுக்கு நவம்பர் 27ம் தேதி அதாவது நாளைய தினம் பிறந்த நாள்.
ஆனால், தன்னுடைய பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இன்று ஒரு அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.

கனமழை
அதில், "கொரோனா பெருந்தொற்று, கனமழை என தொடர் பாதிப்புகளில் இருந்து திமுக அரசின் உதவியுடன் மக்கள் மீண்டு வரும் சூழலில் என் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் உதவும் வகையில் இருக்க வேண்டுமே தவிர அவர்கள் முகம் சுழிக்கும் வகையில் இருக்கவே கூடாது.
ஆகவே எனவே பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிப்பது, பிளக்ஸ் பேனர்கள் வைப்பது போன்ற ஆடம்பரங்களில் அறவே தவிர்க்க வேண்டும்..

பிறந்த நாள்
இது போன்ற ஆடம்பர ஏற்பாடுகளுக்கு ஆகும் கூடுதல் செலவை நலத்திட்ட உதவிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயனுள்ள வகையில் எனது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் அமையும் என்றால் அதைவிட மகிழ்ச்சி தருவது எனக்கு வேறு ஒன்றும் இருக்க முடியாது... மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதிலும் மீட்பு நடவடிக்கைகளில் பாதிப்புகளை சரி செய்வதிலும் உடன்பிறப்புகள் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும்" என கேட்டுக் கொண்டிருந்தார்.

கல்வி உதவித்தொகை
இதையடுத்து, திமுகவினர் உதயநிதியின் பிறந்தநாளை எளிமையுடன் அதே சமயம் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.. அதுபோல, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.. இதில் சிறப்பு விருந்தினராக உதயநிதி கலந்து கொண்டார்.. 1,200 மாணவர்களுக்கு கல்வி உதவிதொகையையும் வழங்கினார்.

கோபாலபுலம்
அப்போது பேசிய உதயநிதி, "ஆழ்வார்பேட்டையில் இருந்து நான் ஜார்ஜ் கோட்டைக்கு சென்றதாக முன்பு பேசியவர் சொன்னார்... அதில் ஒன்றும் தவறில்லையே... ஆழ்வார்பேட்டையில் இருந்தவர்கள் அரசியலில் தோல்வியடைந்து விட்டனர்.... ஆனால் என்னுடைய வீடு ஆழ்வார்பேட்டையில் இருந்தாலும், நான் பிறந்தது எல்லாமே கோபாலபுரம் தான்... எப்பவுமே நான் கோபாலபுரத்துக்காரன்தான்.. கருணாநிதியின் பேரன் என்பதில் பெருமை கொள்கிறேன்..

முதல்வர்
இந்தியாவில் சிறந்த முதல்வராக மு.க. ஸ்டாலின் இருப்பதில் பெருமையில்லை, ஆனால், இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் வர வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்" என்றார். ஆழ்வார்பேட்டையில் இருந்தவர்கள் அரசியலில் தோல்வியடைந்து விட்டனர் என்று உதயநிதி சொல்வது யாரை? ஒருவேளை "அவராக' இருக்குமோ என்ற சந்தேகங்கள் பரபரத்து வருகின்றன.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications