சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏங்க, என்கிட்ட என்ன குறையை கண்டீங்க.. கொந்தளித்த உதயநிதி ஸ்டாலின்.. கப்சிப் ஆன மீட்டிங்..!

அமைச்சர் பதவி குறித்து உதயநிதி செய்தியாளர்களிடம் பதிலளித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: உதயநிதி ஸ்டாலினுக்கு, அமைச்சர் பதவி வழங்குவது குறித்த பரபரப்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அதை பற்றி உதயநிதியே செய்தியாளர்களிடம் பதில் அளித்துள்ளார்.

எம்எல்ஏவாக பொறுப்பேற்றபோது, தன்னுடைய தொகுதியில் ஆக்டிவ்வாக இருந்த உதயநிதி, கடந்த சில மாதங்களாகவே தொகுதி பக்கம் வருவதில்லை..

இதற்கு காரணம், கையில் உள்ள படங்களை முடித்து தந்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக கூறப்பட்டது.

திமுக இந்து விரோத கட்சி என்ற அவதூறை நொறுக்கிவிட்டார் சேகர் பாபு.. நெகிழ்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின் திமுக இந்து விரோத கட்சி என்ற அவதூறை நொறுக்கிவிட்டார் சேகர் பாபு.. நெகிழ்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின்

 அமைச்சர் பதவி

அமைச்சர் பதவி

இந்த சமயத்தில்தான், திமுகவில் சில அமைச்சர்களே, உதயநிதிக்கு அமைச்சர் பதவியை தரலாம் என்று சொல்லவும் ஆரம்பித்துள்ளனர்.. அமைச்சர் பதவி வேண்டாம், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியே தர வேண்டும் என்று கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தரப்பு, முதல்வருக்கு கோரிக்கை வைத்து மனு அனுப்பும் அளவுக்கு சென்றுவிட்டது. இதற்கு அடுத்தக்கட்டமாக, உதயநிதிக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒவ்வொரு மாவட்டங்களிலும் திமுக நிர்வாகிகள் தீர்மானங்களை போட ஆரம்பித்துள்ளனர்.

 உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

அதுமட்டுமல்ல, தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதால், பொங்கல் பண்டிகையையடுத்து, உதயநிதிக்கு புதுப்பதவி கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் முணுமுணுக்கப்பட்டது... எனவே, இது தொடர்பான கேள்வியைதான் செய்தியாளர்கள் உதயநிதியிடம் எழுப்பியிருக்கிறார்கள்.. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மக்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடந்துள்ளது.. இதில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார்.

உதயநிதி

உதயநிதி

பிறகு செய்தியாளர்களிடம் உதயநிதி பேசியபோது, "என்னுடைய பொங்கல் புத்தாண்டு தமிழர்த்திருநாள் வாழ்த்துகள்... தை பிறந்துள்ளது. அரசியல் பணி, திரையுலகில் இலக்கு எதுவும் உள்ளதா? என்று கேட்கிறீர்கள். எனக்கு அப்படி இலக்கு என்று எதுவுமில்லை... என் வேலையை நான் பார்த்துட்டு இருக்கேன்..திமுக தலைவர் ஸ்டாலின் சொல்வதை செய்து கொண்டு இருக்கின்றேன்.. என்னால் முடிந்த அளவுக்கு மக்கள் பணியாற்றிக்கொண்டு இருக்கிறேன்" என்றார்.

சைலண்ட்

சைலண்ட்

அப்போது செய்தியாளர்கள், "தைப்பிறந்தால் வழி பிறக்கும்... உங்களுக்கு வழி பிறக்குமா?" என்று கேட்டனர்.. அதற்கு உதயநிதி, "ஏன்? எனக்கு ஏற்கனவே நல்ல வழிதானே இருக்கிறது. என்ன குறையை கண்டீர்கள்?.. ஏற்கனவே நல்ல வழிதானே இருக்கு" என்று உதயநிதி திருப்பி கேட்க, மொத்த செய்தியாளர்களும் கப்சிப்பென்று ஆகிவிட்டார்களாம்..

 அதே பதில்

அதே பதில்

இதற்கு முன்புகூட, அமைச்சர் பதவி குறித்து உதயநிதியிடம் நேரடியாகவே செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.. அதற்கு உதயநிதி, "அமைச்சர் பதவி போன்ற எந்த பொறுப்பின்மீதும் எனக்கு ஆசை இல்லை. மக்கள் பணியில் என்றும் உங்களுள் ஒருவராக இருக்க வேண்டும், முதல்வர் ஸ்டாலினுக்கும், மக்களுக்கும் ஒரு பாலமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்" என்ற கறாராக பதிலதித்திருந்தார்.. இப்போதும் அதே பதிலையே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..!

English summary
Udhayanidhi stalin says, following Chief minister MK stalin words
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X