உங்களை சொல்லங்க.. சட்டசபையிலேயே சரமாரியாக தவெக செயலை கலாய்த்த உதயநிதி! வாடிப்போன காமராஜ் முகம்
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் கடுமையாக பேசி உள்ளார். விஜய் தலைமையிலான தவெக அரசு மீது மிக கடுமையான விமர்சனங்களை அவர் முன் வைத்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், புதிய ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. கடந்த 10 நாட்களாக இந்த ஆட்சியில் என்ன நடக்கிறது என்பதை விமர்சனமாக வைக்கிறோம்.

தவெக ஆட்சியமைக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 1.72 கோடி வாக்காளர்களும், 3.23 கோடி வாக்காளர்கள் உங்கள் கட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். 65 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சி இது. 118 உறுப்பினர்கள் கொண்ட ஒரு கூட்டணியால் தான் ஆட்சி செய்ய முடியும். தவெகவுக்கு 108 இடங்கள் தான் இருக்கும்.
65% மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த ஆட்சி மீது எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கே கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை குறைந்து வருகிறது. திமுகவின் திட்டங்களில் அரசியல் செய்ய வேண்டாம். இந்த மாதம் 15 ஆம் தேதி உரிமைத் தொகைக்காக மகளிர் காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த 7ம் தேதி செல்ல வேண்டிய.. தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டத்திற்கான தொகைகள் செல்லவில்லை.. முக்கியமாக காலை உணவு திட்டம் அடுத்த மாதம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த ஆட்சி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சியாக இருக்க கூடாது; த.வெ.க ஆட்சியை தொடர தி.மு.க தடையாக இருக்காது. திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி கூட தெரிவிக்காமல், ராஜினாமா செய்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் விஜய். ஒரு தொகுதியில் நிற்க தைரியம் இன்றி இரண்டு தொகுதியில் நின்றுள்ளார்.
தவெக தலைவர் தன் வெற்றி குறித்து நம்பிக்கையில்லாத காரணத்தால் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இன்னும் அந்த தொகுதி மக்களுக்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை. தவெகவுக்கு இப்போது 106 எம்எல்ஏக்கள் ஆதரவு தான் உள்ளது. திமுக கூட்டணி கட்சியின் ஆதரவுடன் தான் தவெக ஆட்சியமைத்துள்ளது. பெரும்பான்மைக்கு எண்ணிக்கை இயலாதது. கூவத்தூரை மிஞ்சுமளவுக்கு கூத்தடிக்கிறார்கள். இந்த ஆட்சி எவ்வளவு நாட்கள் நீடிக்க போகிறது என்று தெரியவில்லை. எம்எல்ஏக்களை கடன் வாங்கி ஆட்சி செய்யும் இந்த அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.
அதிலும் ஒரு கட்சி தலைவருக்கு தெரியாமலே.. அந்த கட்சி எம்எல்ஏவை உங்க கட்சிக்கு ஆதரவு தர வைத்தீர்கள்.. நான் ரொம்ப டீசண்ட்டாக சொல்கிறேன்.. இதெல்லாம் டீசண்ட் வெர்ஷன்.. என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
அவர் அப்படி கூறியதும் தன்னைதான் சொல்கிறார் என்று கோபப்பட்டு குறுக்கிட்ட அமமுக எம்எல்ஏ காமராஜ்.. உதயநிதியை எதிர்த்தார். உடனே உதயநிதி ஸ்டாலின் உங்களை சொல்லவில்லை.. நான் உங்களை சொல்லவில்லை என்று பதிலடி கொடுத்தார். உடனே சபாநாயகர் பிரபாகர்.. காமராஜ் நீங்கள் உட்காருங்கள் .. நீங்கள் உட்காருங்கள் என்று உட்கார வைத்தார். ஆனால் இதை கேட்டு காமராஜ் அப்படியே அப்செட்டாகி அமர்ந்தார்.












Click it and Unblock the Notifications