பாஜக 420 கட்சி! இப்ப என்ன நானும் உள்ளே போகனுமா? உதயநிதி ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன்!
பாஜக எதிர்ப்பில் தாம் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்திய உதயநிதி.
சென்னை: பாரதிய ஜனதா கட்சியை 420 கட்சி என விமர்சித்த உதயநிதி ஸ்டாலின் அதற்கு மேல் அந்தக் கட்சியை பற்றி பேச ஒன்றுமில்லை என்பதை போல் ஒரு ரியாக்ஷனை காட்டினார்.
பாஜக எதிர்ப்பில் தாம் உறுதியாக இருப்பதை இதன் மூலம் உடன்பிறப்புகளுக்கு அவர் உணர்த்தினார்.
சென்னையில் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் நிறுவப்பட்டுள்ள ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட அவர் இதனைக் கூறினார்.

ஸ்டாலின் பிறந்தநாள்
முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை ஒட்டி சென்னையில் அமைச்சர் சேகர்பாபு புகைப்பட கண்காட்சி நடத்தி வருகிறார். இதனை தினம் தோறும் பல முக்கிய விஐபிக்கள் நேரில் சென்று பார்த்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். அப்போது மிசா காலத்தில் ஸ்டாலின் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை தத்ரூபமாக சிலையாக வடித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு உதயநிதி வியந்தார்.

420 கட்சி
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவிலிருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை கடந்த 2 நாட்களாக அதிகரித்து வருவதாகவும் வெளியேறுபவர்கள் எல்லோருமே கட்சியின் தலைவரை 420 என்று கூறிவிட்டுச் செல்வதாகவும் உதயநிதி ஸ்டாலின் கூறினார். இதனால் அந்தக் கட்சியே 420 கட்சி தான் என்றும் மேலும் பாஜகவை பற்றி பேச ஒன்றும் இல்லை என்பதை ரியாக்ஷனாலும் வெளிப்படுத்தினார்.

நானும் உள்ளே போகனுமா?
முன்னதாக ஸ்டாலின் போன்ற தலைவர்கள் எல்லாம் மிசாவில் கைதாகியிருக்கிறார்கள், நீங்கள் வளர்ந்து வரும் தலைவர் என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்த போதே அவருக்கு பதில் கவுன்டர் கொடுத்தார் உதயநிதி. ''இப்ப என்ன நானும் உள்ளே போகனும்ங்கிறீங்களா நீங்க?'' என்ற கேள்வியை கேட்டு அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தினார். தானும் பலமுறை கைதாகியிருப்பதாகவும், ஆனால் ஊழல் வழக்குகாக கைதாகியது கிடையாது, போராட்டங்களில் பங்கேற்றதால் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

பொய் செய்தி
வட மாநில தொழிலாளர்கள் பற்றிய செய்தி பொய்யானது என்பதால் அதைப்பற்றி திருப்பித் திருப்பி பேச வேண்டாம் என்றும் பொய் செய்தி பரப்பும் பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் வேறு என்ன செய்ய முடியும் என வினவினார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications