அறிவாலயத்தில் புது உதயம்.. விரைவில்.. இளைஞர் அணி தலைவராகிறார்.. "இளைய தளபதி"!
திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பொறுப்பு வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது
Recommended Video
சென்னை: நடந்து முடிந்த தேர்தலில் அதிகமாக உழைச்ச உதயநிதிக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டே ஆக வேண்டும் என்று திமுக தரப்பிலிருந்து அறிவாலயத்துக்கு பல விருப்ப கோரிக்கைகள் வந்து கொண்டு உள்ளதாம்!
திமுகவைப் பொறுத்தவரை இளைஞர் அணிக்கு என தனி பெருமையும், முக்கியத்துவமும் உண்டு. இளைஞர் அணியின் தலைவராக நீண்ட காலம் இருந்தவர் மு.க.ஸ்டாலின்.
திமுகவில் கருணாநிதிக்கு அடுத்து அதிக கவனம் பெற்றதும் இந்த இளைஞர் அணிதான். இந்த அணியின் பொறுப்பில் இருந்தபடிதான் தன்னைப் பட்டை தீட்டிக் கொண்டார் ஸ்டாலின்.

வெள்ளக்கோவில் சாமிநாதன்
அத்தகைய சிறப்பு பெற்ற இளைஞர் அணியின் தலைவர் பதவியில் தற்போது வெள்ளக்கோவில் சாமிநாதன் உள்ளார். ஆனால் அவரது செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று முணுமுணுப்பு உள்ளது. அது தீவிரமடைந்துள்ளது. அந்தப் பொறுப்பை உதயநிதி ஸ்டாலினுக்குத் தர வேண்டும் என்று உதயநிதியின் ஆதரவாளர்கள் வற்புறுத்தி வருகின்றனராம்.

வாய்ப்பு
நடந்து முடிந்த தேர்தலில் போட்டியிட உதயநிதி ஸ்டாலினுக்கு ஏதாவது ஒரு சீட் தரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. வாரிசுகளுக்கு சீட் என்ற சர்ச்சை பெயரை திமுக சுமந்தாலும், உதயநிதிக்கு வாய்ப்பு தரப்படவில்லை.

பிரச்சாரம்
மாறாக பிரச்சாரத்தில் களை கட்டினார். குறிப்பாக இளசுகளை கவர்ந்து இழுத்தார். நடிகர் என்ற முறையிலும், கலைஞரின் பேரன் என்ற முறையிலும் உதயநிதியை பார்க்க ஒரு கூட்டம் பிரச்சாரத்திற்கு திரண்டு கொண்டே இருந்தது. புன்னகை மாறாத எளிய பேச்சுக்களால் மக்களை கவர்ந்தார் உதயநிதி. கட்சியின் மூத்த தலைவர்களுக்காக பிரச்சாரம் செய்யும் அளவுக்கும் தன்னை உயர்த்தி கொண்டார்.

உதயநிதி ஸ்டாலின்
ஆனால் வெறும் நட்சத்திர பேச்சாளர் என்பதை தாண்டி வேறு எதுவும் உதயநிதியிடம் தென்படவில்லை. என்றாலும், இந்த முறை திமுகவின் வெற்றிக்காக உழைத்ததில் உதயநிதிக்கும் பங்கு உள்ளது என்று கட்சி நிர்வாகிகளே சொல்கிறார்களாம். அதனால் அவருக்கு கட்சியில் ஒரு பொறுப்பை வழங்க வேண்டும் என்றும் கட்சி தலைமைக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்களாம்.

புதிய பொறுப்பு
இவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ஸ்டாலின் மனைவி துர்காவுக்கும் தனது மகனை அரசியலில் அடுத்த வாரிசாகக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் நீண்ட நாள் கனவும் ஆசையும். "சினிமாவில் இருந்து யார் யாரெல்லாமோ அரசியலுக்கு வரும்போது, ஒரு நடிகர், அதுவும் அரசியல் குடும்பத்தில் இருந்துகொண்டு எதுவும் செய்யவில்லையானால் எப்படி? அதனால் எப்படியும் ஒரு பொறுப்பை உதயநிதிக்கு தர வேண்டும்" என்பது துர்காவின் எண்ணம்!

இளைஞர் அணி தலைவர்
அதுமட்டுமல்ல, உதயநிதியை அரசியலுக்கு இழுக்க மா.சுப்ரமணியன் பங்களிப்பும் அதிகம் என சொல்லப்படுகிறது. இது எல்லா விஷயமும் கட்சி தலைமைக்கு போய் சேர்ந்திருக்கிறது போலும். இதனை பரிசீலிக்கவும் ஆரம்பித்துள்ளாராம் ஸ்டாலின். எப்படியும் உள்ளாட்சி தேர்தலை முடித்தபிறகு உதயநிதிக்கு புதிய பொறுப்பு, குறிப்பாக இளைஞர் அணி தலைவர் பொறுப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

முடிசூட்டுவது உறுதி
உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் அனுபவம் இருக்கிறதா என்றெல்லாம் கேட்க தோன்றினாலும், விரைவில் இளைய தளபதிக்கு முடிசூட்டுவது உறுதி என்கிறது அறிவாலய வட்டாரம்!
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications