திமுகவில் விரைவில் நடக்கும் அதிரடி மாற்றம்.. உதயநிதியின் மாஸ்டர் பிளான்.. மொத்தமாக மாறுதாமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவில் கட்சி ரீதியாக மாவட்டங்கள் 117 ஆக பிரிக்கப்படலாம் என்றும் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையில் இளைஞர்களின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்ற உதயநிதி ஸ்டாலின் பிளானுக்கு முதல்வர் ஸ்டாலினும் இணங்கி இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் பா.கி தெரிவித்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளர்கள் பா. கி ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அரசியல் நிலவரம் தொடர்பாக பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். குறிப்பாக திமுகவில் கட்சி ரீதியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி மாற்றங்களை செய்ய இருப்பதாக வெளியாகும் தகவல் குறித்து பா.கி பேசினார். அவர் கூறியதாவது:-

udhayanidhi-stalins-plan-to-give-more-opportunities-to-youth-in-dmk-journalist-pa-ki-exclusive-inte

திமுகவில் உதயநிதிக்கான வாய்ப்புகளும் செயல்பாடுகளும் அதிகரிக்கும். திமுகவில் கட்சி ரீதியாக மாவட்டங்கள் 117 ஆகும். அதாவது 2 சட்டசபை தொகுதிகள் ஒரு மாவட்டங்கள் ஆகும். இது உதயநிதி ஸ்டாலின் திட்டம் என்கிறார்கள்... இது சரிதான்.. இதற்கு இரண்டு, மூன்று காரணங்கள் உள்ளன. கருணாநிதி இருந்த போது பல தேர்தலில் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தையை ஸ்டாலின் தான் நடத்தினார்.

பல வியூகங்களை வகுத்தார். ஸ்டாலின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது. அதேபோல ஸ்டாலின் திமுக தலைவராக இருக்கிறார். அடுத்த தலைவராக எதிர்பார்க்கப்படும் உதயநிதிக்கு கூடுதல் பொறுப்பாக அவர் அதற்கேற்ப கட்சியை முடுக்கி விடுவதற்கான சாத்தியகூறுகள் இருக்கின்றன. இது இயல்புதான்..எல்லா கட்சியிலும் இருப்பதுதான்.

சட்டப்பேரவை தேர்தலின் போதும் 2019 லோக்சபா தேர்தலின் போதும் அதிகமாக மக்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார். கட்சி பணியில் முழுமையான அக்கறை எடுத்து உழைத்து இருக்கிறார். கருணாநிதி இருக்கும் போது ஸ்டாலின் எப்படி செயல்பட்டாரோ.. அதேபோல ஸ்டாலின் இருக்கும் போது உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார்.

அதற்கு பலன் கிடைக்கிறது. 2019 ல் திமுக ஜெயித்தது. 2021ல் ஆட்சியை பிடித்தது. ஆகையால் உதயநிதி ஸ்டாலின் சொல்லும் யோசனைகள் உத்திகளை கட்சி மேலிடம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இன்னொன்று மாவட்ட செயலாளர்கள் மூத்தவர்களாக இருப்பார்கள்.. அவுங்க புதியவர்கள் பேச்சை எப்படி கேப்பது என்ற ஈகோ இருக்கும்.. இது எல்லா காலத்திலும் எல்லா கட்சியிலும் இருக்கிற இயல்பான குணம் தான்.

புதிய இளைய தலைமுறை புதிய சிந்தனையோடு இருக்கலாம்.. அவர்களுடைய யோசனைகளுக்கும் நவீன சூழலுக்கு ஏற்ப செயல்படுவதற்கும் மூத்த தலைமுறை இணங்காது.. எளிதில் இணங்கி வரமாட்டார்கள். அப்போது புதிய இளைஞர்களை கொண்டு வரவேண்டும். அப்போது எல்லா கட்சியுமே, நிறுவனமுமே இளைய தலைமுறையை கொண்டுவந்தால்தான் வெற்றி பெற முடியும்.

ஆகையால் திமுகவில் மாவட்ட நிர்வாகங்கள் பிரிக்கப்படும் போது அதிகமாக இளைஞர்களுக்கு வாய்ப்பை உதயநிதி அளிப்பார். அது இயல்பான ஒன்று.. ஒரு மக்களவை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் இருப்பார்.. அவர் பல ஆண்டுகளாக இருப்பார்.. வயது ஆகியிருக்கும். கட்சி வளர்ச்சியில் கவனம் செலுத்த மாட்டார்.

அந்த மாதிரியான சூழலில் இளைஞர்களை கொண்டு வர வேண்டும். அப்போது மாவட்டத்தை பிரிக்க வேண்டும். ஒரு மாவட்டத்தை மூன்றாக பிரித்தால் 2 பேர் புதியவர்களை போட வேண்டும். மற்றொன்று பழைய ஆள் இருப்பார். செயல்படவில்லை என்றால் படிப்படியாக மாற்றப்படும்.

மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையில் இளைஞர்களின் பங்கு அதிகரிக்கும். இதைத்தான் உதயநிதி ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். இதற்கு முக ஸ்டாலின் இணங்கி இருக்கிறார். பின்னாடி பார்த்துக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்" இவ்வாறு பத்திரிகையாளர் பா.கி கூறினார். அவரது முழு பேட்டியை ஒன் இந்தியா யூடியூப் சேனலில் பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+