உதயநிதி அமைச்சர் எப்போது முதல்வர் ஆவார்?..முதல்வர் ஸ்டாலின் ரியாக்சன் இதுதான்

உதயநிதி அமைச்சர் ஆவாரா?" என்ற கேள்விக்கு பதிலளிக்காமல், சிரித்தபடியே கிளம்பி சென்றுவிட்டார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதி ஸ்டாலின் எப்போது முதல்வர் ஆவார் என்பதே பலரது கேள்வியாக உள்ளது. அந்த கேள்வியை முதல்வரும் உதயநிதியின் தந்தையுமான மு.க ஸ்டாலினிடம் கேட்டதற்கு புன்னகையை பதிலாக கொடுத்துள்ளார்.

திமுகவின் இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரசியலில் களமிறங்கினாலும் பிஸியாகவே இருக்கிறார்.

ஒரே ஒரு செங்கல்லை கையில் வைத்து எய்ம்ஸ் என்று எழுதி வைத்து ஓட்டு கேட்டது பலரையும் கவர்ந்தது. நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தங்களிடம் மட்டுமே இருப்பதாகவும் கூறி வாக்கு சேகரித்தார். திமுக ஜெயித்து ஆட்சிக்கு வந்து ஓராண்டாகி விட்டது.

அமைச்சரவையில் உதயநிதி

அமைச்சரவையில் உதயநிதி

சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதுமே உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சரவை பட்டியல் வெளியானபோது, அதில் உதயநிதியின் பெயர் இடம்பெறவில்லை. இது அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் ஏமாற்றமாக அமைந்தது. எம்எல்ஏவாக வெற்றி பெற்றாலும் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்கிறார். சட்டசபைக் கூட்டத்தொடரில் நகைச்சுவையாக பேசுகிறார். திமுக நிகழ்ச்சிகளிலும் அரசு நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்துகொண்டு அடுத்த தலைமுறை வாக்காளர்களை கவர்ந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

அமைச்சர்கள் வலியுறுத்தல்

அமைச்சர்கள் வலியுறுத்தல்

உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகவே கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
தற்போது அமைச்சராக உள்ள பலரும் செய்தியாளர்களிடம் பேசும் போதோ, விழாக்களில் பங்கேற்று பேசும் போதோ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் அல்லது துணை முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றனர். அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, சேகர் பாபு போன்றவர்கள் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற தங்களின் விருப்பங்களை வெளிப்படையாகவே தெரிவித்தனர்.

எப்போது அமைச்சராவார்

எப்போது அமைச்சராவார்

உதயநிதியை அமைச்சராக்குவது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனாலும், உதயநிதிக்கு அமைச்சர் பதவி எப்போது கிடைக்கும் என்ற கேள்வி தொடர்ந்து வருகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா, இங்கிலாந்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னதாக உதயநிதி ஸ்டாலின், அமைச்சராக வாய்ப்பு உள்ளது என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

உதயநிதி அறிக்கை

உதயநிதி அறிக்கை

உதயநிதியை அமைச்சராக வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருச்சி தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் வரிசையாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தனக்கு அமைச்சர் பதவி கேட்டு யாரும் தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன் பின்னரும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

புன்னகையை பதிலாக கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

புன்னகையை பதிலாக கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வரிடம், உதயநிதி ஸ்டாலின் எப்போது அமைச்சராவார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதல்வர் ஸ்டாலின் எந்த பதிலையும் கூறாமல் லேசாக சிரித்து விட்டு சென்றார். உதயநிதி ஸ்டாலின் கையில் உள்ள திரைப்படங்களை முடித்த பின்னர் அவர் அமைச்சராக வாய்ப்பு உள்ளது. நல்ல நாள் பார்த்துதான் அவருக்கு கட்சியில் பதவி அளிக்கப்பட்டது. அதே போல ஜோதிடர்கள் குறித்துக்கொடுத்த நல்ல நாளில் அமைச்சர் பதவி அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+