600க்கு 600.. பெரியார் சிலையுடன் சாதனை மாணவி நந்தினி! நேரில் பாராட்டி பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்
சென்னை: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதித்த திண்டுக்கல் மாணவி நந்தினியை நேரில் அழைத்து பாராட்டிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவருக்கு தந்தை பெரியார் சிலையை பரிசாக அளித்து வாழ்த்தி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தன. இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் மாநில அளவில், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதுவரை நடந்து முடிந்த 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளில் தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப் பாடங்களில் மாணவ மாணவிகள் முழு மதிப்பெண்களை பெற்றது மிகக்குறைவு. அதேபோல், மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவ மாணவிகள் மொத்த மதிப்பெண்களை விட 5 அல்லது 10 மதிப்பெண்கள் குறைவாக பெற்று வந்தனர். இதனை தகர்த்து புதிய சாதனையை படைத்து இருக்கிறார் நந்தினி என்ற மாணவி.
திண்டுக்கலை சேர்ந்த தச்சுத் தொழிலாளியின் மகளான நந்தினிதமிழ், ஆங்கிலம் உட்பட 6 பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்று 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600 க்கு 600 என முழு மதிப்பெண்களையும் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாட்டில் இத்தனை மதிப்பெண்களை ஒருவர் பெறுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி நந்தினி பேசியபோது "என் அப்பா ஒரு கூலித் தொழிலாளி. நம்மால் என்ன செய்ய முடியும் என்று நினைத்து நான் கவலைப்படவில்லை. நமக்கு கல்விதான் சொத்து என என்னிடம் பெற்றோர் சொல்லி வளர்த்தனர். அதை நானும் இடைவிடாமல் கடைபிடித்தேன். அதன் விளைவாக இவ்வளவு மதிப்பெண்களை என்னால் பெற முடிந்தது.
நம்பிக்கையோடு முயன்றால் அனைத்தையும் சாத்தியப்படுத்த முடியும். ஆடிட்டராக வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். சிஏ பயிற்சி எடுக்க உள்ளேன். அதற்கான மேல்படிப்புகளை படிக்க இருக்கிறேன்." என்றார். முழு மதிப்பெண்களை பெற்ற மாணவி நந்தினிக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரையும், குடும்பத்தினரையும், ஆசிரியர்களையும் நேரில் அழைத்து பாராட்டினார்.
அத்துடன் மாணவி மற்றும் பெற்றோரிடம் பல்வேறு விசயங்கள் குறித்து விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின், என்ன உதவி தேவைப்பட்டாலும் கேளுங்கள், செய்கிறேன் என்று நம்பிக்கை கொடுத்து பரிசுப் பொருட்களையும் வழங்கி கவுரவித்தார். அவரை தொடர்ந்து விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மாணவி நந்தினியை நேரில் அழைத்து வாழ்த்தினார்.

அத்துடன் தந்தை பெரியாரின் சிலையையும், முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய "உங்களில் ஒருவன்" புத்தகத்தை உதயநிதி ஸ்டாலின் பரிசளித்தார். இதுகுறித்து ட்விட்டரில், "குடும்பச்சூழலோ - பொருளாதார நிலையோ வெல்வதற்கு தடையில்லை என, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600/600 மதிப்பெண் பெற்றுச் சாதனை படைத்துள்ள தங்கை நந்தினியை இன்று நேரில் வாழ்த்தினோம்.
கல்வியே அழியாத சொத்தென்று முழங்கிய அவரது உயர்கல்விக்கு துணை நிற்போமென அன்பை வெளிப்படுத்தி, நந்தினிக்கு உத்வேகமளித்த குடும்பத்தார் - ஆசிரியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தோம்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications