இதுதான் இப்போ தேவை.. வேக்சினுக்காக.. நேராக வீட்டுக்கே கிளம்பி சென்ற உதயநிதி.. நெகிழ்ந்து போன மக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதியான சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் நேரடியாக மக்களின் வீடுகளுக்கே சென்று வேக்சின் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

Recommended Video

    Corona Vaccine குறித்து விழிப்புணர்வு.. நேராக வீட்டுக்கே சென்ற Udhyanidhi

    தமிழகத்தில் கொரோனா வேக்சினை மக்களுக்கு செலுத்துவதற்காக அரசு சார்பாக சர்வதேச டெண்டர் விடப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 5 கோடி வேக்சின்களை வாங்க தமிழக அரசு டெண்டர் விட்டுள்ளது. இந்த வருட இறுதிக்குள் பலருக்கு வேக்சின் போடும் திட்டத்தில் அரசு உள்ளது.

    தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேக்சின் எடுப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வீடு வீடாக வேக்சின் கொடுக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

     மாவட்டம்

    மாவட்டம்

    தமிழகம் முழுக்க பல்வேறு நகரங்கள், உள்ளூர்களில் வேக்சின் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வளவு இருந்தும் கூட வேக்சின் போட்டுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள மாநிலங்களில் தமிழகமும் முன்னிலை வகிக்கிறது. வேக்சின் இருந்தாலும் கூட தமிழகத்தில் பல லட்சமும் மக்கள் வேக்சின் போட்டுக்கொள்ள முன்வருவது இல்லை.

    அச்சம்

    அச்சம்

    போதிய விழிப்புணர்வு இல்லை, மக்களிடையே நிலவும் அச்சம், வேக்சின் மீதான நம்பிக்கை இன்மை, வாட்சப் வதந்திகளை நம்புவது என்று பலர் வேக்சின் மீது நம்பிக்கை இன்றி, அதை போட்டுக்கொள்ள மறுக்கிறார்கள். வேக்சின் போடுகிறோம் என்று நேரடியாக தேடிப்போனால் கூட பல கிராமங்களில், சென்னையிலும் பல ஏரியாக்களில் மக்கள் வேக்சின் போடுவது இல்லை.

    உதயநிதி

    உதயநிதி

    இந்த நிலையில்தான் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கடந்த 3 நாட்களாக தனது தொகுதி மக்களிடையே வேக்சின் போடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். நேரடியாக மக்களின் வீடுகளுக்கே சென்று தனது தொகுதியான சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் வேக்சின் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். எம்எல்ஏவாகே தேர்வானதில் இருந்து உதயநிதி பலமுறை தனது தொகுதிக்கு சென்றுவிட்டார்.

    பிரச்சாரம்

    பிரச்சாரம்

    தனது தொகுதிக்கு பிரச்சாரத்திற்காக பெரிதாக செல்லாத உதயநிதி, தேர்தலில் வென்ற பின் வாரத்திற்கு மூன்று - நான்கு முறை தனது தொகுதிக்கு செல்கிறார். இயல்பாக மக்களிடம் பேசி அவர்களின் சின்ன சின்ன குறைகளை கூட தீர்த்து வைக்கிறார். அதிலும் கடந்த வாரம், பொது கழிப்பிடங்களை பார்வையிட்டு மக்கள் மத்தியில் ஸ்கோர் செய்தார். இந்த நிலையில் தற்போது தனது தொகுதியில் வேக்சின் விழிப்புணர்வை அவர் ஏற்படுத்த தொடங்கி உள்ளார்.

    விழிப்புணர்வு

    விழிப்புணர்வு

    நேரடியாக மக்களின் இருப்பிடத்திற்கு, அவர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு சென்று, ஒவ்வொருவரையும் தனியாக சந்தித்து... வேக்சின் போடுங்க, பயப்படாதீங்க..வேக்சின் போட்டுக்கோங்க.. நல்லது என்று நேரடியாக எல்லோரிடமும் சென்று கோரிக்கை விடுத்து வருகிறார். உதயநிதி இப்படி நேரடியாக வீட்டிற்கே வந்து கேட்பது அந்த தொகுதி மக்களுக்கு நம்பிக்கையையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் வேக்சின் விழிப்புணர்வு இல்லாத நிலையில் உதயநிதி தொடக்கத்தில் இருந்து அதில் கவனம் செலுத்தி வருகிறார்.

    இல்லை

    இல்லை

    தமிழகத்தில் மற்ற ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இதுபோன்ற வேக்சின் விழிப்புணர்வு பணிகளை இதுவரை பெரிதாக மேற்கொள்ளவில்லை. நேராக மக்களிடம் சென்று வேக்சின் குறித்து நம்பிக்கை அளிக்கவில்லை. ஆனால் உதயநிதி மக்களிடம் நேராக சென்று பேசுகிறார். இதுபோன்ற விழிப்புணர்வுதான் இப்போது தேவை. மற்ற எம்எல்ஏக்களும் கட்சி பாகுபாடு இன்றி மக்களை சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+