திருப்பூர் விவகாரம்: காவிகளின் இந்தித் திணிப்பை கருப்பு தாரால் அழித்த திராவிட மண்: உதயநிதி ஸ்டாலின்
சென்னை: திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்டதை தார் பூசி அழித்ததை திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
திருப்பூர் ரயில் நிலையத்தில் சேவை மையம் பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது. திடீரென இந்த பெயர் பலகையாது, இந்தியில் சகயோக் என எழுதப்பட்ட நிலையில் மாற்றப்பட்டது. சகயோக் என இந்தி சொல்லை தமிழிலும் எழுதி இருந்தனர். இது கடும் சர்ச்சையானது.

ராமதாஸ் எதிர்ப்பு
பாமக நிறுவனர் டாக்டர் ராமதஸ் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் உள்ள சேவை மையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த சேவை மையம் பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, அதற்கு மாற்றாக சகயோக் என்று இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் அப்பட்டமான இந்த இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது. இந்தி தெரிந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் இது புரியாது. இது புதிய வகை இந்தித் திணிப்பாகும்.

புது வகை இந்தி திணிப்பு
புதிய, புதிய வகைகளில் இந்தியை திணிக்க முயல்வதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுடன் தொடர்வண்டித்துறை விளையாடக் கூடாது. இந்தியைத் திணிக்கும் இத்தகைய அறிவிப்பு பலகைகள் திருப்பூர் உட்பட எங்கு இருந்தாலும் அவற்றை தொடர்வண்டித் துறை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

உதயநிதி எச்சரிக்கை
இது தொடர்பாக திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:திருப்பூர் ரயில் நிலைய சேவை மைய பெயர் தமிழில் எழுதப்பட்டதை அகற்றி இந்தி எழுத்தால் எழுதியதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் அதிகாரிகளால் இன்று அந்தப் பதாகை அகற்றப்பட்டுள்ளது. 'காவி'களின் இந்தித் திணிப்பை, 'கருப்பு' தார் கொண்டு அழித்த திராவிட மண் என்றும் அனுமதிக்காது. எச்சரிக்கிறோம். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் நடவடிக்கை
திருப்பூர் ரயில் நிலையத்தில் சகயோக் என இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டது எதற்காக பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து திருப்பூர் ரயில் நிலைய அதிகாரிகள் தாமாகவே முன்வந்து இந்தி திணிப்பு பலகையை அகற்றிவிட்டனர். இதனால் போராட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications