பொங்கலன்று தேர்வா? தமிழகத்தில் கிளம்பிய கண்டனம்.. பணிந்தது NTA! யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு!
சென்னை: ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை அன்று யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்த நிலையில் கடும் கண்டனம் எழுந்தது. தேர்வை ஒத்தி வைக்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது அன்று நடக்க இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் ஆகவும் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் கால்நடைகளுக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். அன்றைய தினம் திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படும் நிலையில் அரசு சார்பில் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
15ஆம் தேதி திருவள்ளுவர் தினத்திற்காகவும் 16ஆம் தேதி உழவர் திருநாளை ஒட்டியும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 17 ஆம் தேதி வேலை நாள் வந்தது. அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் வார இறுதியில் காரணமாக 18, 19 விடுமுறை நாட்களாக இருந்தது இந்த நிலையில் 17ஆம் தேதியையும் விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அன்றும் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தேசிய தேர்வு முகமை சார்பாக யுஜிசி நெட் தேர்வு 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 15ஆம் தேதி மாட்டுப் பொங்கல் ஆகவும், திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு நன்றி கூறும் அந்த நாளில் தேர்வு நடைபெறுவதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிற மாநிலங்களில் மகர சங்கராந்தி விழா கொண்டாடப்படும் நிலையில் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்," ஜனவரி 15, 2025 அன்று பொங்கல், மகர சங்கராந்தி மற்றும் பிற பண்டிகைகளின் காரணமாக UGC NET டிசம்பர் 2024 தேர்வை ஒத்திவைக்க தேசிய தேர்வு முகமை பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளது.
விண்ணப்பதாரர்களின் நலன் கருதி, ஜனவரி 15, 2025 அன்று நடப்பதாக திட்டமிடப்பட்ட UGC-NET தேர்வை மட்டும் ஒத்திவைக்க தேசிய தேர்வு முகமை (NTA) முடிவு செய்துள்ளது. புதிய தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஜனவரி 16ஆம் தேதி நடக்க இருந்த தேர்வு முந்தைய அட்டவணையின் படியே நடத்தப்படும் எனவும் புதிய தேர் தேர்வுக்கான தேதி
ugcnet.nta.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பின்னர் தெரிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருக்கும் மலையில் தேர்வர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் 16ஆம் தேதி தேர்வு நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்த தேதியிலும் தேர்வு நடத்துவதை ஒத்திவைத்து வேறு தேதியில் தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications