ஆதார் கார்டில் வரும் மெகா அப்டேட்.. ஏஐ வசதியுடன் e-Aadhaar செயலி! இனி வீட்டிலிருந்தபடியே திருத்தம்!
சென்னை: இந்தியாவில் மிக முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் மாறிவிட்டது. இந்த நிலையில் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற ஆதார் தகவல்களை மாற்றம் செய்வதற்கு சேவை மையங்களை நாடிச் செல்ல வேண்டிய நிலை இதுவரை இருந்தது. இனி அதுபோன்று பொதுமக்கள் அரசு அலுவலகங்களைத் தேடி அலைய தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே தங்கள் ஆதார் தகவல்களை மாற்றம் செய்யும் வகையில் புதிய செயலி ஒன்றை UIDAI அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த செயலி மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இன்று ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை மிகவும் முக்கியமான அடையாள ஆவணமாகிவிட்டது. வங்கிக் கணக்கு தொடங்குவது முதல் அரசு நலத்திட்டங்கள், வருமான வரித்துறை செயல்முறைகள் வரை ஆதார் அட்டை அவசியமான ஒன்றாகிவிட்டது.
ஆனால் இதில் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற தகவல்களில் தவறுகள் ஏற்பட்டால், மக்கள் நேரில் ஆதார் மையங்களுக்கு சென்று திருத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் நேர விரயம் மற்றும் தேவையற்ற தாமதங்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டன.

UIDAI புதிய செயலி
இந்த சிக்கலை தீர்க்க UIDAI (Unique Identification Authority of India) ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. அந்த வகையில், ஆதாரை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியாக . "e-Aadhaar App" எனப்படும் இந்த புதிய செயலி அறிமுகமாகவுள்ளது. இத செயலி மூலம், ஆதார் தொடர்பான தகவல்களை மக்கள் தாங்களே வீட்டிலிருந்தபடியே திருத்த முடியும். குறிப்பாக பிறந்த தேதி, பெயர், பெயர்களில் எழுத்துப்பிழை, முகவரி, மொபைல் எண் போன்ற முக்கிய விவரங்களை இனி ஆதார் மையத்திற்கு செல்லாமல் மொபைல் மூலமாகவே புதுப்பிக்க முடியும்.
e-Aadhaar செயலி
இந்த e-Aadhaar செயலி Android மற்றும் iOS இரண்டிலும் கிடைக்கும். சாதாரண பயனாளிகளும் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் இதை வடிவமைக்க UIDAI முயற்சி எடுத்துள்ளது. இதன் மூலம் ஆதார் மையங்களில் கூடுதல் நெரிசல் குறையும், மக்களின் நேரமும் சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக UIDAI அதிகாரிகள் கூறும் போது, புதிய e-Aadhaar செயலியில் AI (Artificial Intelligence) தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முகஅடையாளம் (Face Recognition) மற்றும் கைரேகை (Biometric Verification) வழியாக பயனாளரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படும். இதனால் தரவு பாதுகாப்பு மேலும் வலுப்பெறும், போலி ஆதார் மோசடிகளைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது.
கைரேகை சரிபார்ப்பு
இந்த செயலி 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தற்போது UIDAI-க்கு mAadhaar என்ற செயலி உள்ளது. அதில் ஆதார் தகவல்களைப் பார்க்கவும், டிஜிட்டல் வடிவில் கார்டுகளை சேமிக்கவும் முடியும். ஆனால் அதில் தகவல் திருத்த வசதி இல்லை. புதிய e-Aadhaar செயலி இதை சரிசெய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக இணையதள வழி சேவையுடன் கூடியதாக இருக்கும்.
டிஜிட்டல் இந்தியா திட்டம்
அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், 2025 இறுதிக்குள் படிப்படியாக நாடு முழுவதும் வெளியிடப்படும் என UIDAI வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த முயற்சி 'டிஜிட்டல் இந்தியா' (Digital India) திட்டத்தின் முக்கியமான ஒரு முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இது பொதுமக்களுக்கு அதிக வசதியையும், ஆதார் அமைப்பில் பாதுகாப்பான மாற்றத்தையும் அளிக்கும். எனவே இனி நாட்கணக்கில் ஆதார் திருத்தத்துக்காக மக்கள் அலைய தேவையில்லை என்கின்றனர் அதிகாரிகள்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications