ஆதார் பெயர் மாற்ற போறீங்களா? இனி இந்த ஆவணம் ஏற்றுக்கொள்ளப்படாது.. வெளியான முக்கிய அப்டேட்
சென்னை: ஆதார் என்பது தற்போது தவிர்க்க முடியாத ஆவணமாக இருந்து வருகிறது. ஆதார் கார்டில் நாம் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் இனிமேல் பேன் கார்டை ஆவணமாக சமர்ப்பிக்க முடியாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. பான் கார்டில் அட்ரஸ் இல்லை. பெயர் தவிர மற்ற விவரங்கள் தெளிவாக இல்லை என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆதார் என்பது தற்போது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணே முதன்மையானதாக கேட்கப்படுகிறது. அதேபோல் செல்போன் சிம் கார்டு வாங்குவது முதல் பள்ளிகளுக்கு அட்மிஷன் வரை தற்போது ஆதார் எண்ணே பிரதானமாக கேட்கப்படுகிறது.

ஆதார் கார்டு
இதனால் ஆதார் என்பது தற்போது தவிர்க்க முடியாத ஒரு ஆவணமாக உள்ளது. ஆதார் கார்டில் குடிமக்களின் பெயர், முகவரி, தந்தை பெயர், 12 இலக்க எண்கள், புகைப்படம் ஆகிய விவரங்கள் இடம் பெற்று இருக்கின்றன. இதில் ஏதேனும் ஒரு விவரத்தில் தவறு இருந்தால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இதனால், ஆதார் அடையாள அட்டையில் சரியான பெயர், முகவரி இருப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. இதில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால் இந்திய பாஸ்போர்ட், ரேஷன் கார்டு (குடும்ப தலைவர் மட்டும்), வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசன்ஸ், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய சாதி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் போன்ற ஆவணங்களை இணைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் கார்டு அட்டை
அதே நேரத்தில் பான் கார்டு அட்டை பெயர் மாற்றத்திற்கான ஆவணமாக ஏற்க முடியாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் எனப்படும் (UIDAI) தெரிவித்துள்ளது. தனித்துவ அடையாள ஆவணத்தின் இந்த புதிய அறிவிப்புப்படி, இனி ஆதார் பெயர் மாற்றத்திற்காக பான் கார்டு சமர்ப்பிக்க முடியாது.
முறையான சான்றாக கருத முடியாது
பான் கார்டில் அட்ரஸ் இல்லை. பெயர் தவிர மற்ற விவரங்கள் தெளிவாக இல்லை. பான் கார்டு என்பது வரித்துறை சம்பந்தமான ஒரு ஆவணம் மட்டுமே. அவற்றை அடையாளத்திற்கான ப்ரூஃப் ஆக ஆவணமாக பார்க்க முடியாது. பான் கார்டில் பெயர் இருப்பதால் மட்டுமே அதை முறையான சான்றாக கருத முடியாது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இந்த திடீர் அறிவிப்பால் 18 வயதுக்கு மேற்பட்டோர் பெயர் திருத்தம் செய்வதில் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications