பாரத் கேஸ்.. சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியவில்லையா.. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை
சென்னை: சிலிண்டர் முன்பதிவு செய்ய 15 நாட்கள் என்று இருந்ததை கிராமங்களில் 45 நாட்களாக மத்திய அரசு மாற்றியது.. அதேபோல் நகரங்களில் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான காலத்தை 15 நாட்களில் இருந்து 25 நாட்களாக மாற்றியது. ஆனால் உண்மையில் நகரங்களிலும் 45 நாட்கள் கழித்தே முன்பதிவு செய்ய முடியும் என பாரத் கேஸ் எண்ணெய் நிறுவனம் எஸ்எம்எஸ் அனுப்பி உள்ளது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்ட நிலையில், அடுத்த புக்கிங் மார்ச் 25 என்று வந்தது.ஆனால் நேற்று முன்பதிவு செய்ய முயன்ற போது, ஏப்ரல் 4 என்று வந்தது.. இன்று ஏப்ரல் 14க்கு பிறகே முன்பதிவு செய்ய முடியும் என்று வந்துள்ளது.
பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் பலரும் சிலிண்டரை முன்பதிவு செய்வதில் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். பலரும் ஒரு சிலிண்டர் இருக்கிறதே என்ற தைரியத்தில் முன்பதிவு செய்யாமல் விட்டுவிட்டார்கள். திடீரென கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காரணத்தால் சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கிராமங்களில் சிலிண்டர் முன்பதிவு செய்யவே 45 நாட்கள் காத்திருக்கிறார்கள். 46வது நாள் முன்பதிவு செய்தால் அடுத்த ஒரு வாரத்தில் தான் சிலிண்டர் கைக்கு வருகிறது. அதாவது கிட்டத்தட்ட 54 நாட்கள் வரை ஆகிறது. இதனால் சிலிண்டர் இல்லாமல் முன்பதிவும் செய்ய முடியாமல் கிராமங்களில் மக்கள் தவிக்கிறார்கள்.
நகரங்களில் 15 நாட்கள் இருந்ததை ஒரே நாளில் அடுத்தடுத்து நாட்களை மத்திய அரசு மாற்றியது. இதன்படி நகரங்களில் 15நாட்கள் என்பதை 25 நாட்களாக மாற்றியது. ஆனால் நடைமுறையில் 25 நாட்களில் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியவில்லை என்று பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.
மறைமலைநகர் நகராட்சியில் வசிக்கும் ஒருவருக்கு கடந்த பிப்ரவரி 28ம் தேதி சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டது. அதன்பிறகு அவர் சரியாக 15 நாட்கள் கழித்து முயற்சித்த போது, உங்கள் நெக்ஸ்ட் எல்பிஜி புக்கிங் மார்ச் 25ம் தேதி என்று வந்துள்ளது. அதாவது 25 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறியது. அவர் மார்ச் 25ம் தேதி முன்பதிவு செய்ய முயன்ற போது ஏப்ரல் 4ம் தேதி வரை காத்திருந்து அதன்பிறகு முன்பதிவு செய்யுமாறு எஸ்எம்எஸ் வந்துள்ளது.
இதுபற்றி நேற்று முன்தினம் ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், மத்திய அரசு சிலிண்டர் முன்பதிவு காலத்தை நகரங்களுக்கு 25 நாட்கள் என்பதை 35 நாட்களாக மாற்றவில்லை என்று மறுத்தது.. இதையடுத்து அந்த நபர் மீண்டும் இன்று காலை முன்பதிவு செய்ய முயன்றார். அப்போது அவருக்கு வந்த எஸ்எம்எஸ் இல், கடந்த பிப்ரவரி 28ம் தேதி சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டது. எனவே ஏப்ரல் 14ம்தேதிக்கு பிறகே நீங்கள் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியும் என்று வந்துள்ளது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கிட்டத்தட்ட சிலிண்டர் முன்பதிவு காலம் 45 நாட்கள் என்று மாறி உள்ளது. கிராமங்களுக்கு தான் 45 நாட்கள் என்று இருந்தது. மறைமலைநகராட்சிக்கு உள்பட்ட நகரத்தில் கூட 45 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று மாற்றியிருக்கிறது எண்ணெய் நிறுவனங்கள். இதுபற்றி அறிய பாரத் கேஸ் ஏஜென்சியை தொடர்பு கொண்டால், அவர்கள் அழைப்பை கூட ஏற்க மறுப்பதாக புகார்கள் வந்துள்ளது. சிலிண்டர் கிடைக்காமல் நாங்கள் பரிதவிக்கிறோம். ஆனால் அரசு முன்பதிவு காலத்தை நீட்டித்துக் கொண்டே சென்றால், எப்படி சிலிண்டர் வாங்குவது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications