Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எங்களுக்கு வேற வழி தெரியலங்க!" ஓயாத எலிகள் பிரச்சனை.. கடைசியில் கர்நாடக போலீஸ் எடுத்த அதிரடி முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்நாடகாவில் எலிகள் பிரச்சினை கட்டுக்கடங்காமல் செல்லவே போலீசார் வேறு வழியின்றி எடுத்துள்ள நடவடிக்கை சிரிப்பலையை ஏற்படுத்துவதாக உள்ளது.

நமக்கு எல்லாம் பிரச்சினை என்றால் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிப்போம். அவர்கள் அந்த வழக்கை விசாரித்த உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

அதே அந்த போலீசாருக்கே ஒரு பிரச்சினை என்றால் அவர்கள் என்ன செய்வார்கள்? அதுவும் சிறு விலங்கு ஒன்றால் பிரச்சினை என்றால் என்ன செய்வார்கள்!

போலீசார்

போலீசார்

அது போன்ற ஒரு சம்பவம் தான் நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடந்துள்ளது. நீண்ட காலமாகக் கர்நாடக மாநிலம் கவுரிபிதானூர் ஊரக போலீஸ் ஸ்டேஷனில் ஒரு விலங்கால் பிரச்சினை இருந்துள்ளது. அதை முடிவுக்குக் கொண்டு வர போலீசார் எடுத்து எந்தவொரு நடவடிக்கையும் அவர்களுக்கு உதவவில்லை. இதையடுத்து வேறு வழியின்றி அவர்கள் எடுத்த நடவடிக்கை தான் இணையத்தில் பலராலும் வேகமாகப் பரவி வருகிறது.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடக தலைநகர் பெங்களூரில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஊர் கௌரிபிதனூர். இந்த ஊரில் கடந்த 2014ஆம் ஆண்டு போலீஸ் நிலையம் கட்டப்பட்டது. இருப்பினும், அப்போது முதலே அங்கு எலிகள் பிரச்சினை இருந்துள்ளது. முதலில் இதைச் சாதாரண பிரச்சினையாக நினைத்து விட்டுவிட்டனர். சில நேரங்களில் முக்கிய கோப்புகள் மாயமாகி உள்ளன.

கர்நாடகா

கர்நாடகா

இதனால் எலிகள் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர அவர்கள் முயற்சிகளை எடுத்துள்ளனர். இருப்பினும், அவை பெரியளவில் பலன் தரவில்லை. மேலும், நாட்கள் செல்ல செல்ல பல முக்கிய கோப்புகளை எலிகள் நொறுக்கித் தள்ளி உள்ளன. எலிகளை அழிக்க அவர்களின் பல்வேறு முயற்சிகளும் பலன் தராமல் போகவே, இயற்கை பக்கமே தீர்வுக்குத் திரும்பி உள்ளனர்.

 எலிகள் பஞ்சாயத்து

எலிகள் பஞ்சாயத்து

ஆம், எலிகள் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர அவர்கள் பூனைகளைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். எலிகளை அழிக்கப் பூனைகளைப் பயன்படுத்தியது ஒரு அளவுக்கு நல்ல முடிவைத் தந்ததாகவே கூறப்படுகிறது. இது தொடர்பாக கௌரிபிதனூர் ஊரக காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விஜய் குமார் கூறுகையில், "போலீஸ் நிலையம் அருகே ஏரி ஒன்று இருக்கிறது. அங்கிருந்து எலிகள் அடிக்கடி எங்கள் போலீஸ் நிலையத்திற்கு நுழைந்துவிடுகிறது.

 குறைந்தது

குறைந்தது

எலிகள் காவல் நிலையம் முழுவதும் இருந்தன. மேலும் முக்கிய கோப்புகளையும் சேதப்படுத்தின. இதைத் தடுக்க பல முயற்சிகள் எடுத்தும் பலன் இல்லை. இதையடுத்து வேறு வழியின்றி முதலில் ஒரு பூனையை இங்குக் கொண்டு வந்தோம். உடனடியாக எலிகள் பிரச்சினை கணிசமாகக் குறைந்தது. இது நல்ல பலனைத் தரவே இரண்டாவதாக ஒரு பூனையையும் வாங்கி உள்ளோம். அவை ஏற்கனவே பல எலிகளைக் கொன்றுவிட்டன. நாங்கள் இரண்டு பூனைகளுக்குப் பால் மற்றும் உணவை வழங்குகிறோம். அவை இப்போது எங்களில் ஒருவனாகவே மாறிவிட்டது" என்றார்.

 செலவு

செலவு

இந்த போலீஸ் நிலையம் மட்டுமில்லை, கர்நாடகாவில் பல அரசுத் துறைகளுக்கு எலிகள் பிரச்சினை தலைவலியாகவே உள்ளது இதற்காக அவர்கள் கணிசமான தொகையைச் செலவழிக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. கர்நாடக தேர்வுகள் ஆணையம் (KEA) எலி மற்றும் கொசுத் தொல்லையைத் தடுக்க ஆண்டுக்கு சுமார் 50,000 ரூபாய் செலவழிக்கிறது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒன்றில் தெரிய வந்துள்ளது. கடந்த 2010-15 ஆண்டு காலகட்டத்தில் மட்டும் கர்நாடக அரசு எலிகளை அழிக்க 19.34 லட்சம் ரூபாய் செலவழித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+