இத்தனை கிலோ தங்கம் விற்பனையா? சென்னை தி.நகரில் அட்சய திருதியை மேஜிக்! தலைசுற்ற வைக்கும் பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தியாகராய நகர் முதல் தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் நேற்று அட்சய திருதியை முன்னிட்டு மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், தங்கம் விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் காலை 5 மணி முதல் நள்ளிரவு வரை பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பல 100 கிலோ தங்கத்தை வாங்கிச் சென்றனர். தமிழகம் முழுவதும் சுமார் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் இந்த ஒரே நாளில் நடைபெற்றிருக்கலாம் என்று நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

அட்சய திருதியை அன்று தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்த போதிலும், நேற்று (ஏப்ரல் 20) திடீரென சவரனுக்கு ₹480 வரை குறைந்தது பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. இன்று (ஏப்ரல் 21) அதே விலையில் மாற்றமின்றி ஆபரணத் தங்கம் சவரன் ₹1,14,400-க்கு விற்பனையாகிறது.

Gold Rate Chennai Akshaya Tritiya gold record Gold Sale 2026 T Nagar Gold Rush Chennai Gold Market Gold Price Chennai Jewellery Sales Tamil Nadu Business Gold Investment Midnight Shopping Gold Demand India 2026

இன்று தங்கம் விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ₹14,300 என்ற விலையில் நீடிக்கிறது. அட்சய திருதியைக்கு முன்கூட்டியே நகைகளை முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த விலை வீழ்ச்சி ஒரு கூடுதல் லாபமாகவே பார்க்கப்படுகிறது."

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், அக்ஷய திருதியையை முன்னிட்டு நகை வாங்குவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2 லட்சம் ரொக்கப் பணத்தை, நாகர்கோவிலில் பறக்கும் படையினர் நேற்றைய தினம் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.

அட்சய திருதியை கிலோ கணக்கில் தங்க நகைகள்

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட இந்தப் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்ஷய திருதியை நாளில் நகை வாங்கத் திட்டமிட்டிருந்த அந்த நபருக்கு, இந்த எதிர்பாராத சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் எந்த அளவிற்குத் தீவிரமாக உள்ளது என்பதையும் உணர்த்தியுள்ளது.

இந்த கெடுபிடிக்கு நடுவில்தான், தமிழகம் முழுவதும் அட்சய திருதியை விழா நேற்று மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த நன்னாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையால், பொதுமக்கள் நகைக்கடைகளில் அலைமோதினர்.

சென்னை தி.நகர் நகைக்கடைகள்

குறிப்பாக சென்னையில் உள்ள தியாகராய நகர், புரசைவாக்கம், மயிலாப்பூர் மற்றும் வடசென்னை பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் அதிகாலை 5 மணிக்கே விற்பனை தொடங்கிவிட்டது. காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்குப் பிடித்தமான ஆபரணங்களை வாங்கிச் சென்றனர்.

ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 55,000 ரூபாயைத் தாண்டி விற்பனையான போதிலும், விலையைப் பொருட்படுத்தாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்தனர். அதிலும், சென்னையின் பிரதான வணிக பகுதியான தி.நகரில் உள்ள பெரிய நகைக்கடைகள் முதல் சிறிய கடைகள் வரை எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாகவே காட்சியளித்தன.

விலையை விடுங்க சார்

"விலையை விடுங்க சார், வருஷத்துக்கு ஒருமுறை வரும் இந்த நாளில் தங்கம் வாங்குவது எங்கள் பாரம்பரியம். அதனால்தான் கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் வந்திருக்கிறோம்" என்று நகை வாங்க இல்லத்தரசி ஒருவர் கூறுகிறார்..

இத்தனைக்கும் பொதுமக்களின் வசதிக்காகப் பல கடைகளில் டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனாலும் நேற்று சாயங்காலத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால், அந்தப் பகுதிகளில் போக்குவரத்தைச் சீர்செய்யக் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

செய்கூலி சேதாரம் - ஹைலைட்

இந்த வருட விற்பனை எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததாக வியாபாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது..
அதுமட்டுமல்ல, விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் சிறிய காசுகளாகவோ அல்லது மோதிரமாகவோ வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள்.. ஏற்கனவே புக்கிங் செய்திருந்தவர்கள் தடையின்றி நகைகளை வாங்கிச் சென்றனர்" என்கிறார்கள்.

நேற்றைய தினம் ஹைலைட்டே, செய்கூலி மற்றும் சேதாரம் ஆகியவற்றில் வழங்கப்பட்ட சிறப்புத் தள்ளுபடிகள் தானாம்.. இதுதான் நகை வாங்க வந்த, நடுத்தர வர்க்கத்தினரை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றிருக்கலாம் எனத் தொடக்கக்கால மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. சென்னையில் மட்டும் பல நூறு கிலோ தங்கம் விற்பனையாகியிருக்கிறதாம்..

வெள்ளி பொருட்கள், வெள்ளி நாணயங்கள்

ஆபரணத் தங்கம் மட்டுமன்றி, வெள்ளிப் பொருட்களின் விற்பனையும் இந்த முறை அமோகமாக இருந்தது. விளக்குகள், குங்குமச் சிமிழ் மற்றும் வெள்ளி நாணயங்களை மக்கள் அதிக அளவில் விரும்பி வாங்கினர். பல பெரிய நகை நிறுவனங்கள் மிட்நைட் 12 மணி வரை கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்தன. நள்ளிரவு தாண்டியும் பல இடங்களில் விற்பனை நீடித்தது, அட்சய திருதியை நாளின் முக்கியத்துவத்தைக் காட்டியது.

ஒரே நாளில் பல ஆயிரம் கோடி

அதுமட்டுமல்ல, தங்கத்தின் விலை சர்வதேசச் சந்தையில் உயர்ந்து வரும் நிலையிலும், தமிழக மக்களின் தங்கத்தின் மீதான மோகம் சற்றும் குறையவில்லை என்பது இந்த அட்சய திருதியை விற்பனை மூலம் உறுதியாகியுள்ளது.

எப்படி பார்த்தாலும், இந்த ஆண்டு விற்பனை கடந்த ஆண்டை விட 20 சதவீதம் வரை அதிகரித்திருக்கலாம் என்று வியாபாரிகள் கூறுகிறார்கள். இருந்தாலும் அதிகாரப்பூர்வமான முழு விற்பனைத் தரவுகள் இன்னும் ஓரிரு தினங்களில் முழுமையாகத் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+