நாக்கு ருசி கேட்குதோ? குழம்பு ருசியில்லைனு சொன்ன கணவனை.. எகிறி பாய்ந்து நாக்கை கடித்து துப்பிய மனைவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கணவரைப் பற்றி மனைவி குறை கூறுவதும், மனைவியைப் பற்றி கணவர் குறை கூறுவதும் ஒவ்வொரு வீடுகளிலும் நடக்கக்கூடிய இயல்பான ஒரு விஷயம் தான், இருவருக்கும் இடையே வாக்குவாதம், சில நேரங்களில் சண்டை போன்றவையும் நடக்கத்தான் செய்யும். ஆனால் அதற்காக இப்படி கூடவா நடக்கும்? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு கொடூர சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. அதுவும் திருமணம் ஆன ஆறே மாதங்களில் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது என்பது கூடுதல் ஆச்சரியமாக உள்ளது.

குழம்பு சரியில்லை என்ற பிரச்சனை வீடு தோறும் வருவது சகஜம்தான்.. சிலசமயம் இது சீரியஸாக போய்விடுவதும் உண்டு.. சமீபத்தில் கோவை பொள்ளாச்சியை சேர்ந்த ஒருவர், தன்னுடைய மனைவி வைத்த குழம்பு சரியில்லை என்று சொன்னார்.. இதனால் விரக்தி அடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

Egg curry Newlywed wife tongue

கறிக்குழம்பு வைக்காத மனைவி

அதேபோல தெலுங்கானா மாநிலத்தில் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடந்தது.. சேரலா கௌராரம் கிராமத்தை சேர்ந்த நவீன் என்பவர், இரவு குடிபோதையில் வீடு திரும்பி, மனைவியிடம் கறி குழம்பு சமைக்கக் கேட்டார்... இரவு நேரத்தில் ஆட்டுக்கறி கிடைக்காது என்பதால், மனைவி சமைக்க மறுத்துள்ளார்..

இதனால் கோபமடைந்த நவீன், போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு 100-க்கு போனை போட்டார்.. தன்னுடைய மனைவி கறிக்குழம்பு சமைக்கவில்லை என்று புகார் சொன்னார்.. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த அழைப்பை துண்டித்துவிட்டனர்..

உருண்டு பிரண்ட போதை நபர்

யாரோ பிராங்க் செய்கிறார்கள் என்று போலீசார் நினைத்துள்ளனர். ஆனால், தொடர்ந்து அழைப்புகள் வரவும், கடுப்பான போலீசார், நேரடியாகவே நவீன் வீட்டிற்கு சென்றனர்.. குடிபோதையில் புரண்டு உளறி கிடப்பதை பார்த்து, அமைதியாக திரும்பி சென்றுவிட்டனர்.

ஆனால் மறுநாள் காலை போலீசார் நவீனைக் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவசர எண்ணான 100-ஐ தவறாக பயன்படுத்தக்கூடாது என பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுத்தது நினைவிருக்கலாம்.

இப்போது உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது... காசியாபாத் அருகே உள்ள மோதி நகர் பகுதியில் சேர்ந்தவர்கள் விபின் - இஷா தம்பதியர்.. இஷாவுக்கு 23 வயதாகிறது... இவர்களுக்கு 6 மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது..

முட்டை குழம்பு ருசியாக இல்லை

நேற்று முன்தினம் இரவு இஷா வீட்டில் முட்டை குழம்பு சமைத்துள்ளார். இதை சாப்பிட்ட விபின், 'நீ வைத்த முட்டை குழம்பு ருசியாக இல்லை, முட்டை குழம்பு கூட சரியாக வைக்க தெரியாதா? என்று மனைவியை திட்டியதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த இஷா, ருசி கேட்பது இந்த நாக்குதானே? என்று கோபத்துடன் கூறி தனது கணவரின் நாக்கை இழுத்துப் பிடித்து கடித்து விட்டாராம்.. இதில் விபினின் நாக்கின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டது. இதனால் ரத்தம் கொட்டி அலறித் துடித்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விபினின் அம்மா கீதா, போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில் தனது மகனின் நாக்கை மருமகள் இஷா காய்கறி வெட்டும் கத்தியின் உதவியால் வெட்டி விட்டதாக கூறியுள்ளார்.

போலீசார் அதிர்ச்சி

உடனே இது தொடர்பாக போலீசாரும் விசாரணையை கையில் எடுத்தனர்.. அப்போதுதான் கத்தியை வைத்து கணவரின் நாக்கை இஷா வெட்டவில்லை என்பதும், தன்னுடைய பற்களால் கடித்தே விபினின் நாக்கை துண்டாக்கி விட்டார் என்பதும் தெரிய வந்து, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்..

இதன் விசாரணைக்குப் பிறகு இஷாவை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். திருமணமான ஆறே மாதங்களில் கணவரின் நாக்கை கடித்து துப்பிய மனைவி கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+