தாம்பரம் சென்ற ஓடும் மின்சார ரயிலில் வடமாநில வாலிபரின் அநாகரிக செயல்.. பயணிகள் ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் மின்சார ரயில் ஒன்று புறப்பட்டது. அந்த ரயில் எழும்பூரை கடந்து சென்ற போது ஓடும் மின்சார ரெயிலில் வடமாநில இளைஞர் ஒருவர் செயத அநாகரிக செயலால் பயணிகள் ஆடிப்போனார்கள். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் மின்சார ரயில் புறப்பட்டு சென்றது. எழும்பூர்-சேத்துப்பட்டு இடையே ரயில் சென்று கொண்டிருந்தது, அப்போது மின்சார ரெயிலின் ஒரு பெட்டியில் போதையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் பயணித்துள்ளார்.

Uncouth behavior by a young man from North India on a moving electric train bound for Tambaram

அவர் போதையின் உச்சத்தில் திடீரென சக பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் ரெயில் பெட்டிக்குள்ளேயே சிறுநீர் கழித்திருக்கிறார். அந்த பெட்டியில் பெண் பயணிகளும் இருந்தனர். வடமாநில வாலிபரின் இந்த அநாகரிக செயலை பார்த்து அதிர்ச்சியடைந்த சில பயணிகள், அந்த வாலிபருக்கு தர்மஅடி கொடுத்தார்கள். பின்னர் அடுத்த ரயில் நிலையத்தில் அவரை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார்கள்..

இதனிடையே, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இரவு 11 மணிக்கு மேல் கஞ்சா போதையில் சில வாலிபர்கள் சுற்றித்திரிவதாகவும் பயணிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.. தனியாக ரெயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் வடமாநில தொழிலாளர்களை கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன்களை பறிக்கும் சம்பவங்களும் நடைபெறுவதாகவும் சிலர் குற்றம்சாட்டினார்கள்.

அத்துடன் இரவு நேரங்களில் ரயில் நிலையம் சென்று பயணிக்கவே அச்சமாக இருப்பதாகசில பெண் பயணிகள் வேதனை தெரிவித்தனர். இரவு 10 மணிக்கு மேல் ரயில்வே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் நடைமேடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர். சந்தேகப்படும்படி சுற்றித்திரிபவர்களிடம் சோதனை நடத்த வேண்டும் என்றும் கடைசி மின்சார ரெயில் சேவை முடியும் வரை ரயில்வே போலீசார் மின்சார ரயில்களில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் பெண் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு கடைசி இரயில் இரவு 11:20 PM மணிக்குப் புறப்படுகிறது. அதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டிற்கு (Chengalpattu): கடைசி இரயில் இரவு 11:00 PM மணிக்குப் புறப்படுகிறது. அதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணத்திற்கு (Arakkonam): கடைசி இரயில் இரவு 11:45 PM மணிக்குப் புறப்படுகிறது. சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் புறநகர் இரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி/சுள்ளூர்பேட்டை செல்லும் கடைசி புறநகர் ரயில் 11.20க்கு புறப்படுகிறது. அதேபோல் கடற்கரையில் இருந்து வேளச்சேரி வழயாக பரங்கிமலைக்கு 10.20க்கு புறப்படுகிறது. இந்த ரயில்கள் அனைத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.இந்த ரயில்களில் பெண்கள் தனியாக பயணிக்கும் நிலை அதிகமாக வருகிறது. எனவே பாதுகாப்பு பணியை அதிகரிப்பதுடன், கண்காணிப்பு கேமரா மூலம் இரவில் ரயில் நிலையங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+