பெரும் பணக்காரர்களின் நீச்சல் குளங்களால்.. தண்ணீருக்கு அல்லோலப்படும் ஏழைகள்.. ஆய்வில் ஷாக் தகவல்
சென்னை: பெரும் செல்வந்தர்கள் தங்கள் நீச்சல் குளங்களுக்கு பயன்படுத்தும் நீரால் ஏழை மக்கள் குடிநீர் வசதி இன்றி தவிக்கும் நிலை இருப்பதாக அதிர்ச்சிகர ஆய்வு வெளியாகியுள்ளது.
பருவநிலை மாறுபாடு காரணமாக சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாற்றம்.. இதனால், போதிய அளவு மழை பெய்யாமல் வறட்சி ஏற்படுவது.. நிலத்தடி நீரை அளவுக்கதிமாக பயன்படுத்துவது என தண்ணீர் பஞ்சம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மூன்றாம் உலகப் போர் ஒன்று ஏற்படுமேயானால் அது குடிநீருக்காகத்தான் இருக்கும் என்ற எச்சரிக்கையும் நீண்ட காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது. நீரின்றி அமையாது உலகு என வள்ளுவன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறினாலும் நீரின் முக்கியத்துவத்தை பற்றி இன்னும் கூட மக்கள் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

கோடைக்காலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு தண்ணீருக்கு அல்லோலப்படும் மக்களை நம் நாட்டிலும் கூட காண முடிகிறது. எதிர்காலத்தில் ஏற்பட போகும் மிகப்பெரும் தண்ணீர் நெருக்கடிக்கு இது ஒரு அபாய ஒலியாகத்தான் இதை கருதமுடியும். தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து ஒருபக்கம் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெற்று வந்தாலும் மற்றொரு பக்கம் தண்ணீர் வீணடிப்புகளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
இந்த நிலையில், பெரும் செல்வந்தர்கள் தங்கள் நீச்சல் குளங்களுக்கு பயன்படுத்தும் நீரால் ஏழை மக்கள் குடிநீர் வசதி இன்றி தவிக்கும் நிலை இருப்பதாக அதிர்ச்சிகர ஆய்வு வெளியாகியுள்ளது. ஸ்வீடன், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் இது தொடர்பாக நடத்திய ஆய்வு நேச்சர் சஸ்டெய்னபிலிட்டி என்ற இதழில் வெளியாகி இருக்கிறது.

அந்த அறிக்கையின் படி, நகரங்களில் பெரும் பணக்காரர்கள் தங்கள் நீச்சல் குளங்களுக்கு தண்ணீர் நிரப்புவது... தண்ணீர் அதிகம் பாய்ச்சப்படும் அழகு பசுமை தோட்டங்கள், மற்றும் கார்களை சுத்தப்படுத்த நீர் பயன்படுத்துவது போன்றவையால் தண்ணீர் நெருக்கடி ஏற்படுகிறது. பருவநிலை மாற்றம் மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பு ஆகியவற்றால் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறைக்கு நிகராக பணக்காரர்களின் இந்த பயன்பாட்டால் தண்ணீர் நெருக்கடி ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிக்கையில் உலகம் முழுவதும் அதிக வறட்சியை எதிர்கொண்டு வருவதாக 80 பெரு நகரங்களின் பட்டியலும் இடம் பெற்றுள்ளது. இதில், மியாமி, ஆஸ்திரேலியாவின் மெல்ர்போன், இங்கிலாந்தின் லண்டன், சீனாவின் பெய்ஜிங் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன். சென்னை, பெங்களூர் ஆகிய நகரங்களும் இந்த பட்டியலில் உள்ளது. வறட்சி மற்றும் நிலையில்லாத நீர் பயன்பாடு ஆகியவற்றால் கடந்த 20 ஆண்டுகளாக மேற்கூறிய நகரங்கள் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications