உல்லாச வாழ்க்கையில் மூழ்கிய கணவர்.. ரிசார்ட்டில் ரீல்ஸ் காதலி.. போலீசுடன் எதிரே வந்து நின்ற மனைவி
சென்னை: இளம் பெண்ணும், நபரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்தனர்.. ஒருகட்டத்தில் திருமணமும் செய்து கொண்டனர்... ஆனால் சில மாதங்களிலேயே தம்பதிக்குள் வெடித்த சிக்கல், அந்த குடும்பத்தையே பாதித்துள்ளது.. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.. என்ன நடந்தது?
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெட்ரேலோ ஜேக்கப்.. இவர் கம்ப்யூட்டர் என்ஜினீயர்.. இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் பணியாற்றி வருகிறார்...

காதல் திருமணம்
இவர் இளம் பெண் ஒருவரை காதலித்து 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.. ஆனால் அந்த வேறு சாதியை சேர்ந்தவராம்.. இருவரும் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினார்கள்.. இந்த தம்பதிக்கு தற்போது ஒரு குழந்தை உள்ளது.. ஆனால் காலப்போக்கில் தம்பதிக்கிடையே அடிக்கடி சண்டைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் உருவானது
ஒவ்வொரு முறை சண்டை வரும்போதும், தனது மனைவியை சாதி பெயரை கூறி திட்டியும் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் தொடர்ச்சியாக துன்புறுத்த துவங்கினாராம் ஜேக்கப்.. இதனால் அவரது மனைவி கடும் மனஅழுத்தத்துக்கும், கவலைக்கும் ஆளானார்... என்றாவது ஒருநாள் கணவர் மனம் திருந்துவார் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தார்..
ஜேக்கப் - ரீல்ஸ் வீடியோ
ஆனால் ஜேக்கப் இன்னொரு பெண்ணுடன் பழக துவங்கினார்.. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது... ஒருகட்டத்தில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து ஜேக்கப் நிறைய ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார் இவைகளை பார்த்து மனைவி மேலும் அதிர்ச்சி அடைந்தார்..
இதனால் குடும்ப பிரச்சனை தீவிரமடைந்தது.. மனைவி எந்நேரமும் அட்வைஸ் செய்வதால் எரிச்சலடைந்த ஜேக்கப், வீட்டை விட்டு வெளியேறி கள்ளக்காதலியுடன் உல்லாசமாக வாழ ஆரம்பித்துள்ளார்...
இதற்கு மேல் பொறுமை இழந்த மனைவி, உடனடியாக பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார் அந்த புகாரில் தனது கணவர் தனக்கு தெரியாமல் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் தன்னை சாதி பெயரை கூறி திட்டி அடித்து துன்புறுத்துவதாகவும், கணவரின் இதுபோன்ற நடவடிக்கைகளால் தான் மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்..
காட்டேஜ் கள்ளக்காதல்
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்... மேலும் ஜேக்கப்பையும் தேடி வந்தனர்..
அப்போதுதான் ஜேக்கப் தனது கள்ளக்காதலியுடன் எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருப்பதாக தகவல் மனைவிக்கு ரகசியமாக கிடைத்துள்ளது.. உடனே அதனை போலீசாருக்கும் தெரிவித்தார்
அதன்பேரில் போலீசார் அந்த ரிசார்ட்டுக்கு விரைந்து சென்று, அதிரடி சோதனை நடத்தினார்கள்.. அப்போது அங்குள்ள ஒரு அறையில் ஜேக்கப் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்ததை கண்டுபிடித்தனர்.. போலீசாரை பார்த்ததுமே ஜேக்கப் அதிர்ச்சியில் உறைந்தார்.. அங்கேயே அவரை கையும் களவுமாக கைது செய்த போலீசார். தொடர்ந்து அவரிடம் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்...!!












Click it and Unblock the Notifications