ஸ்டார் ஓட்டல் லிப்ட்டில் தொழிலதிபரிடம் நெருங்கிய பெண்.. என்னாது ரூ.10 கோடியா? ஆடிப்போன மும்பை
சென்னை: வசதி படைத்த தொழிலதிபர் ஒருவர், தன்னுடைய செல்ல மகனுக்கு சமீபத்தில் திருமணம் செய்தார்.. இந்த திருமணத்துக்காக உறவினர்களுக்கு, ஸ்டார் ஓட்டல் ஒன்றில் விருந்தும் வைத்தார்.. அப்போது லிப்ட்டில் நடந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.. என்ன நடந்தது ?
மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அரவிந்த் கோயல்.. இவரது மகன் பெயர் ரித்தம்.. இவருக்கு யஷஷ்வி என்ற பெண்ணுடன் கடந்த நவம்பர் 5-ம் தேதி கல்யாணம் நடந்தது..

குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்த இந்த கல்யாணம் மகிழ்ச்சியான சூழலில் நடந்தது. கல்யாணத்துக்கு பிறகு, நவம்பர் 14-ந்தேதி, அம்போலி பகுதியில் உள்ள பிரபல ஸ்டார் ஓட்டலில் ரித்தம் தன்னுடைய நண்பர்களுக்கு விருந்து தந்தார்.. அந்த விருந்தில் நண்பர்கள் அனைவரும் பங்கேற்று ஜாலியாக இருந்தனர்..
ஸ்டார் ஓட்டல் லிப்ட்
விருந்து முடிந்த பிறகு, ரித்தம், யஷஷ்வி மற்றும் அவரது தம்பி 3 பேரும் ஓட்டல் லிப்ட்டில் இருந்து கீழே இறங்கினார்கள். அப்போது லிப்ட்டில் இன்னொரு பெண் ஏறினார்.. திடீரென, அந்த பெண் ரித்தம் தன்னிடம் லிப்ட்டில் தவறாக நடந்து கொண்டார் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
லிப்ட் தரைதளத்துக்கு வந்ததுமே கத்தி கூச்சலிட்டு சண்டை செய்தார்... இதனால் ஓட்டல் பகுதியே பரபரப்பாகிவிட்டது.. இந்த விஷயம் போலீஸ் வரை சென்றது.. அம்போலி காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சில நாட்களுக்கு பிறகு, சம்பந்தப்பட்ட பெண், இன்னொரு பெண்ணை அழைத்து கொண்டு, தொழிலதிபர் அரவிந்த் கோயலை சந்தித்து பேசினார்கள்..
மும்பை தொழிலதிபர்
வழக்கை நீதிமன்றத்திற்கு செல்லாமல் தீர்க்க வேண்டுமானால், தங்களுக்கு ரூ.10 கோடி வேண்டும் என்றும், அப்படி கொடுக்காவிட்டால் புதிதாக திருமணமான மகன் ரித்தல் மீது பாலியல் புகார்களை கூறி, அவரை வாழ்நாள் முழுக்க ஜெயிலில் தள்ளிவிடுவதாகவும் மிரட்டினார்கள்.. இதனால் தொழிலதிபர் அரவிந்த் கோயல் அதிர்ந்து போனார்.. தன் மீது வீண்பழி சொல்வதுடன், தன்னுடைய மகன் மீதும பாலியல் புகாரா? தன்னை போல் யாரும் இந்த பெண்களிடம் சிக்கிவிடக்கூடாது என்றும் முடிவு செய்து, அந்த பெண்களுக்கு 5.5 கோடி ரூபாய் தருவதாக ஒப்புக் கொண்டார்..
பிறகு உடனடியாக, இந்த 2 பெண்களும் தன்னை மிரட்டி பணம் பறிக்கிறார்கள் என்று போலீசிலும் புகார் ஒன்றையும் தந்துவிட்டார் அரவிந்த் கோயல்.. இதனால் போலீசார் அந்த 2 பெண்களையும் கைது செய்ய முடிவு செய்தனர்.. இதற்காக பணம் தருவதாக சொல்லி, அப்பெண்களை வரவழைக்கும்படி தொழிலதிபர் அரவிந்த் கோயலிடம் சொன்னார்கள்..
ரூ.10 கோடி - பெண்
அதன்படியே அரவிந்த் கோயலும் அப்பெண்களை லோயர் பரேல் பகுதிக்கு வந்து பணத்தை பெற்று கொண்டு செல்லுமாறு அழைத்தார்... அடுத்த சில நிமிடங்களில் 2 பெண்களும் பணத்தை பெற வந்தபோது, அங்கு மறைந்திருந்த போலீசார், ஹேம்லதா பேன் (39) மற்றும் அம்ரினா பெர்னாண்டஸ் (33) ஆகிய இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்..
இந்த விவகாரத்தில் இன்னொரு நபர் உத்கர்ஷ் என்பவரும் சம்பந்தப்பட்டுள்ளதால், போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இப்போது கைதானவர்களை கோர்ட்டுக்கு அழைத்து சென்று, சிறையில் தள்ளும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்..
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications