வீல் சேரில் உட்கார்ந்து.. அப்படியே ரவுண்டடித்து சிரித்த எச். வசந்தகுமார்.. இரக்கமே இல்லாத 2020..!
மறக்க முடியாத நபர் வசந்த் & கோ வசந்தகுமார்
சென்னை: வீல் சேரில் உட்கார்ந்தபடியே ஒரு ரவுண்டு அடித்து திரும்பி பார்த்து சிரிக்கும் எம்பி வசந்த்குமார் நம்மையெல்லாம் விட்டு பிரிந்த வருடம் இது.. அரசியல்வாதிகளிலேயே வித்தியாசமான, அதிசயமான இந்த நபரின் பிரிவு நம்மால் இன்றளவும் மறக்க முடியவில்லை.
எளிமை + புன்னகை = இதுதான் வசந்தகுமார்.. இவர் கோபப்பட்டு, டென்ஷன் ஆகி யாருமே பார்த்திருக்க முடியாது.. 38 வருஷத்துக்கு முன்பு தன் நண்பரால் வாடகைக்கு தரப்பட்ட மளிகைக்கடையை வீட்டு உபயோகப்பொருட்கள் விற்கும் கடையாக மாற்றியவர்.. ஆனால், இவரது அயராத உழைப்பால், இந்த கிளைகள் 64 கிளைகளுடன் பிரிந்து கிடக்கின்றது!

தொழிலில் வெற்றி பெற்ற வசந்தகுமார், அரசியலையும் விட்டு வைக்கவில்லை.. கடந்த 10 வருஷத்துக்கு முன்பு அதிலும் இறங்கி களம் கண்டார்.. நாங்குநேரி தொகுதி மக்களின் பிடித்தமானவரானார்.. கன்னியாகுமரியில் எம்பியாக நின்று வெற்றி பெற்றது முதல் இப்போதுவரை இவருக்கு ஆதரவாளர்கள் இன்னமும் உண்டு.
இதைதவிர, 'வெற்றிப் படிக்கட்டு' என்ற தலைப்பில் வசந்த் தொலைக்காட்சியில் உரையாற்றி வந்தது பெரிதும் வரவேற்பை பெற்றது... வாழ்க்கையில் வெற்றி பெற துடிக்கும் அனைவரையும் ஊக்குவிக்கும் விதமாகவும், தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி அமைத்துக்கொள்ளும் விதமாகவும் அவரது எளிய உரை எல்லோர் மனசிலும் எளிதாக பதிந்தது.
"இங்கு எதுவும் சுலபம் இல்லை... சின்னச் சின்ன விஷயங்களில் இருந்து ஒவ்வொன்றையும் படிப்படியாகதான் பிளான் செய்ய வேண்டும்.. ஏதாவது தடைகள் வந்தால், அதை தகர்க்க போராடுவதற்கு பதில், செல்லும் திசையை மாற்றி முன்னேறி செல்ல வேண்டும்" என்ற சூட்சுமம்தான் இவரது தாரக வார்த்தைகள்.
வசந்தகுமார் அடிப்படையிலேயே ரொம்ப நாணயமானவர்.. எளிமையானவர்.. எந்தவித பந்தாவும் இவரிடம் இருக்காது. எப்போதுமே அந்த சிரிப்புதான் இவரது ஸ்பெஷல்.. யாரையுமே நோகடித்து பேச மாட்டார்.. அரசியல் ரீதியாகவும் யாரையும் சரமாரியாகவும், காட்டமாகவும் விமர்சித்ததுகூட இல்லை.. சுருக்கமாக சொன்னால், இவர் ஒரு அதிசய வெள்ளந்தி.. ஒரு மனினுக்கு அயராது உழைப்பும், நம்பிக்கையும், நாணயமும் இருந்தால், நிச்சயம் வாழ்வின் உச்சத்தை தொட்டுவிடக்கூடும் என்பதற்கு உதாரணமே வசந்தகுமார்தான்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications