அங்கன்வாடியில் மகளை சேர்த்த ஐஏஎஸ்.. 100 நாளில் மக்கள் குறையை தீர்க்க போகும் ஷில்பா.. ஸ்டாலின் சாய்ஸ்
சென்னை: 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற பெயரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி இருக்கும் புதிய துறையை திருநெல்வேலி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் ஷில்பா நிர்வகிக்க உள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் அடுத்த 100 நாட்களில் மக்கள் வைத்த கோரிக்கை மனுக்கள் அனைத்திற்கும் தீர்வு காணும் வகையில் புதிய துறை ஒன்றை முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி உள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது தொகுதி வாரியாக மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மக்களின் குறைகளை மனுக்கள் மூலம் வாங்கிய ஸ்டாலின், அதை ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவேன் என்று கூறினார்.
இதற்காக தனித்துறையை தற்போது முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி உள்ளார். மக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை உருவாக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதிகாரி
இந்த புதிய துறையை நிர்வகிக்க ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய துறைக்கு ஐஏஎஸ் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் இவரின் பெயர் அறிவிக்கப்பட்டது. இவர் கர்நாடக மாநிலத்தில் பிறந்து வளர்ந்து, அங்கு சட்டம் படித்தவர்.

யார்?
பின் யுபிஎஸ்சி தேர்வில் 46வது இடத்தை அகில இந்திய அளவில் பிடித்து தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 2010ல் திருச்சியின் உதவி ஆட்சியராக இருந்தார். பின்னர் 2014ல் திருப்பத்தூர் சப் டிவிஷனின் துணை ஆட்சியராக இருந்தார். அதை தொடர்ந்து சென்னை கார்பரேஷனில் கல்வித்துறையின் துணை கமிஷனராக தேர்வானார்.

ஆட்சியர்
ஒரு வருடம் இந்த பணியில் இருந்தவர் கைத்தொழில் துறை வழிகாட்டல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பணியகத்தின் நிர்வாக துணைத் தலைவரானார். பின்னர் 2018ல் திருநெல்வேலி ஆட்சியராக ஷில்பா அறிவிக்கப்பட்டார். திருநெல்வேலி ஆட்சியராக இவரின் பணி கவனிக்கப்பட்டது. முக்கியமாக அங்கு கந்து வட்டிக்கு எதிராக இவர் செயல்பட்ட விதம், அங்கு பாதிக்கப்பட்ட மக்களை இவர் அணுகிய விதம் கவனிக்கப்பட்டது.

ஷில்பா
ஷில்பா நெல்லைக்கு சென்ற பின் அப்பகுதி மக்களின் விருப்பமான நபராக மாறினார். அதோடு தனது மகள் கீதாவை அங்கு இருக்கும் பாளையங்கோட்டை அங்கன்வாடி பள்ளியில் சேர்த்து முன்னுதாரணமாக திகழ்ந்தார். கலெக்டர் மகள் என்றெல்லாம் பார்க்காமல், அங்கன்வாடி பள்ளிக்கு தனது மகளை அனுப்பி வைத்து கவனம் ஈர்த்தார்.

பெற்றோர்
அதோடு தினமும் அங்கன்வாடிக்கு சென்று குழந்தையை விடுவதும், அங்கு வரும் மற்ற ஏழ்மையான பெற்றோர்களிடம் பேசுவதையும் ஷில்பா வழக்கமாக வைத்து இருந்தார். இவர் மீது நெல்லை திமுகவினர் நல்ல மதிப்பு வைத்து இருந்தனர். ஸ்டாலினின் குட் லிஸ்டிலும் இவர் இருந்தார்.

மதிப்பு
இதையடுத்து தற்போது உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தை செயல்படுத்த போகும் முக்கியமான பொறுப்பு ஷில்பாவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. ஷில்பாதான் திமுகவின் இந்த மிகப்பெரிய ஸ்டார் வாக்குறுதியை முன்னின்று நிறைவேற்ற போவது. இதனால் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications