வாட்ஸ்அப்பில் திடீரென வந்த மெசேஜ்! குழம்பிப் போன அதிகாரிகள்.. மேயர் பிரியா பெயரில் புதுவித மோசடி
சென்னை: சென்னை மேயர் படத்தை வாட்ஸ்-அப்பில் வைத்து மோசடி முயற்சி நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நவீன உலகத்தில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சைபர் குற்றங்களில் மிகவும் குறைந்த குற்றங்கள் மட்டுமே புகார் அளிக்கப்படுகிறது. அதுவே மிரளச் செய்யும் அளவுக்கு உள்ளது.

சைபர் குற்றங்கள்
சைபர் குற்றங்களின் உண்மையான அளவு நம்மை மலைக்கச் செய்துவிடும். இதனிடையே தமிழ்நாட்டில் முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் ஃபோட்டோக்களை ப்ரொபைல் ஃபோட்டோக்களாக வைத்துக் கொண்டு, நூதன முறையில் பண மோசடி செய்வதும் அதிகரித்து வருகிறது. முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் ஃபோட்டோக்கள் இருப்பதால் முதலில் இதைப் பலரும் நம்பிவிடுகின்றனர்.

சென்னை மேயர்
அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரிகளுக்கு வாட்ஸ்-அப் செயலி மூலம் சில மெசேஞ்கள் ஆங்கிலத்தில் அனுப்பப்பட்டு இருந்தது. மேயர் பிரியாவின் படத்தை ப்ரொபைல் ஃபோட்டோவாக இருந்ததால், அதிகாரிகள் பலரும் அது மேயரிடம் இருந்து வந்த மெசேஜ் என்று நினைத்தே பதில் கூறி வந்தனர்.

சந்தேகம்
முதலில் நிர்வாக ரீதியாக சில கேள்விகள் இருந்தது. ஆனால் அதன் பின்னர் வாட்ஸ்-அப், ஜி பே போன்ற செயலிகள் மூலம் உடனே பணம் அனுப்ப வேண்டும் எனக் கேட்டு மெசேஜ் வந்துள்ளது. இதைப் பார்த்ததும் மண்டல அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மேயரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இது குறித்துத் தெரியப்படுத்தி உள்ளனர்.

புகார்
அப்போது தான் இந்த மோசடி முயற்சி தெரிய வந்துள்ளது. பெரியமேடு காவல் நிலையத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மேயர் பிரியா புகார் அளித்துள்ளார். இது மத்திய குற்றப் பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதையடுத்து மேயர் படத்துடன் போலியாக மெசேஜ் அனுப்பி, பண மோசடியில் ஈடுபட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

முதல்முறை இல்லை
மேலும் இதுபோல பணம் கேட்டு வரும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் இதுபோன்ற நூதன மோசடி முயற்சிகள் அரங்கேறுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே வேலூர், திருப்பூர், கோவை, தேனி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களின் பெயர்களில் மோசடி அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications