வருமான வரி தாக்கலின் போது! பொய் கணக்கு காட்டினாலோ! வரி ஏய்ப்பு செய்தாலோ! 100 சதவீதம் அபராதம்!
சென்னை: வருமான வரி தாக்கல் செய்யும் போது பொய் கணக்கு காட்டினாலோ தவறான தகவல்களை வழங்கினாலோ 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2026- 2027 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அப்போது வருமான வரி குறித்த அறிவிப்புகளை அவர் வெளியிட்ட போது முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதாவது வருமான வரி தாக்கல் செய்யும் பொய் கணக்கு காட்டினாலோ, தவறான தகவல்களை வழங்கினாலோ 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். வருமான வரி தாக்கல் தொடர்பான சிறிய குற்றங்களுக்கு எந்த கிரிமினல் வழக்கும் கிடையாது என அறிவித்துள்ளார்.
எனவே வருமான வரி தாக்கலின் போது வருமானத்தை மறைத்து பொய் கணக்கு காட்டக் கூடாது. அப்படி காட்டினால் எவ்வளவு வருமான வரி செலுத்தப்பட வேண்டுமோ அந்த அளவுக்கு அபராதமும் விதிக்கப்படும் என்பதுதான் இந்த அறிவிப்பாகும்.
இது வரி ஏய்ப்பையும் மத்திய அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் முழுமையாக கிடைக்கவும் இந்த அறிவிப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய தினம் வருமான வரி தொடர்பான அறிக்கைகளில் ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து காப்பீட்டுக்கான வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். தனி நபர்கள் வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படும்.
திருத்தப்பட்ட வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மார்ச் 31 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்து விற்பனை மீதான வரி குறைக்கப்படும்.
வெளிநாடு சுற்றுலா பேக்கேஜ்களுக்கு 2 சதவீதமாக வரி குறைப்பு. மருத்துவம், கல்வி செலவுக்கு வரி பிடித்தம் 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும். டேட்டா மையம், கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனங்களுக்கு 2047 ஆம் ஆண்டு வரை வரி கிடையாது.
புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தும் 17 மருந்துகளுக்கு சுங்க வரி நீக்கப்படுகிறது. மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் மின்சார வாகனத்தில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிக்கு வரி இல்லை.
தனி நபர் வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதால் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டபடி 4 லட்சம் ரூபாய் வரை வரி இல்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications