ரூட் கிளியர் ஆகுதா? பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட்டுக்கு டிடிவி தினகரன் வரவேற்பு? என்ன சொன்னார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பெண்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கும், பெண்களின் வளர்ச்சிக்கும் முக்கியத்தும் அளித்திருப்பது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மத்திய இடைக்கால பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில், கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி, ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்ய புதிய செயலி, நாடு முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க குழு அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் 4 கோடி விவசாயிகளுக்கு வேளாண் காப்பீடு, விவசாய துறையில் அதிக முதலீடு, சூரிய ஒளி மேற்கூரை அமைக்கும் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

 Union budget 2024: importance to womens welfare programs and womens development, says TTV Dhinakaran

இதேபோல் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த நிலையில், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது:- தொலைநோக்கு சிந்தனை கொண்ட மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வரவேற்கக் கூடிய பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருப்பினும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்வு, விவசாயிகளின் நலனுக்கான சிறப்பு திட்டங்கள் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது.

மகிழ்ச்சி, மனநிறைவு: சீர்திருத்தம், செயலாக்கம், மாற்றம் என்பதை தாரகமாக கொண்டு இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பெண்களின் உயர்கல்வி 28 சதவிகிதம் அதிகரிப்பு, பெண் தொழில் முனைவோருக்கு முத்ரா திட்டத்தின் கீழ் 30 கோடி கடன் என பெண்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கும், பெண்களின் வளர்ச்சிக்கும் முக்கியத்தும் அளித்திருப்பது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகிறது.

உதான் திட்டம்: கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி, ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்ய புதிய செயலி, நாடு முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க குழு அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் நாட்டின் சுகாதாரத்துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இருந்தாலும், அடிக்கல் நாட்டப்பட்டு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி, கட்டுமானப்பணிகள் குறித்த எந்த அறிவிப்பும் இடம்பெறாதது தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதான் திட்டத்தின் கீழ் சிறு நகரங்களுக்கு விமான சேவை தொடங்க 1000 விமானங்கள் கொள்முதல், வந்தே பாரத் ரயில்களின் சேவை அதிகரிப்பு, முக்கியத்துவம் வாய்ந்த 3 புதிய ரயில் பெருவெளி தடங்கள், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க கூடுதல் பேட்டரி சார்ஜ் நிலையங்கள் என போக்குவரத்து வளர்ச்சி தொடர்பான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.

ஏமாற்றம் அளிக்கிறது: 4 கோடி விவசாயிகளுக்கு வேளாண் காப்பீடு, விவசாய துறையில் அதிக முதலீடு, சூரிய ஒளி மேற்கூரை அமைக்கும் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட விவசாய நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டிருந்தாலும், விவசாயிகளின் ஊக்கத்தொகை இரட்டிப்பு, உர மானியம், விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம், கடன் தள்ளுபடி, நதிநீர் இணைப்பு குறித்த அறிவிப்புகள் இடம்பெறாதது அவர்களை மிகுந்த கவலையடையச் செய்திருக்கிறது.

வரி செலுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்திருக்கும் நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனி நபர் வருமானம் உயர்த்தப்படாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது. வரிக்கான உச்சவரம்பு உயர்த்தப்படாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது. இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் மோதுவது உறுதியாகியுள்ளது.

டிடிவி தினகரனின் நிலைப்பாடு: தனித்து போட்டியிடவும் அதிமுக தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதே வேளையில் அதிமுக கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டதால் தனியாக ஒரு அணியை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது.

பாஜக கூட்டணியில் ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரி வேந்தரின் ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இணையலாம் என்று கூறப்படுகிறது. பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் எந்த பக்கம் சாயும் என்று தெரியவில்லை. அண்மைக்காலமாகவே மத்திய பாஜகவை அதிகம் விமர்சிக்காமல் அனுசரனையான போக்கை கையாண்டு வரும் டிடிவி தினகரன், பாஜக கூட்டணியில் இணைவதை ஏறத்தாழ உறுதி செய்துவிட்டாரோ என்று கூறும் விதமாகத்தான் அவரது தற்போதைய செயல்பாடுகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+