Union Budget: தங்கம் விலை பட்ஜெட் தாக்கலுக்கு பின் தாறுமாறாக குறையுமா? வரி குறைக்கப்படுமா.. எகிறும் எதிர்பார்ப்பு
சென்னை: தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது. தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வரும் சூழலில் நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை குறைத்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா என பலரும் எதிர்பார்த்து உள்ளனர்.
தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரையை குறைப்பதன் மூலம், விலை சற்று குறையும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தங்கத்தை பொறுத்தவரை இந்தியா, பெரும்பகுதியை இறக்குமதி செய்கிறது. எனவே இதற்கு விதிக்கப்படும் அதிக வரிகள் உற்பத்திச் செலவுகளை அதிகரிப்பதால் வரியை குறைத்தால் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எட்டா உயரத்தில் தங்கம் விலை
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை இப்படி தாறுமாறாக உயர காரணம் அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கைகளால் பொருளாதார நிச்சயத்தன்மை, முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகம் முதலீடு செய்வது, இந்திய ரூபாயின் வீழ்ச்சி போன்ற காரணங்கள் சொல்லப்படுகிறது.
சென்னையில் நேற்று முன் தினம் ஒரு சவரன் தங்கம் ரூ.1,34,440-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்றும், இன்று தாறுமாறாக சரிந்துள்ளது. இன்று சென்னையில் கிராமுக்கு ரூ 950 குறைந்து ஒரு கிராம் ரூ 14,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ. 1,19,200 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய சூழலில் நாளை ஞாயிற்றுக்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யபட இருக்கிறது.
பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?
பட்ஜெட்டிற்கு ஒரு நாளே உள்ள சூழலில், தங்கம் விலை குறைவதற்கான நடவடிக்கை ஏதேனும் எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை உறுதியான நடவடிக்கையை எடுப்பார் என்று ஜுவல்லரி துறை சார்ந்தவர்கள் நம்பிக்கையுடன் காத்து இருக்கிறார்கள்.
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை குறைப்பதன் மூலம் விலை சற்று குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தங்கத்தை பொறுத்தவரை இந்தியா, பெரும்பகுதியை இறக்குமதி செய்கிறது. இதற்கு விதிக்கப்படும் அதிக வரிகள் உற்பத்திச் செலவுகளை அதிகரிக்கின்றன.
ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுமா?
எனவே, இறக்குமதி வரியை குறைப்பது மூலப்பொருட்களின் செலவை குறைக்கும் என்று அத்துறையை சேந்தவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதாவது, வரி குறைப்பு மேற்கொள்ளப்பட்டால் இறக்குமதி செலவுகள் குறையும், ஏற்றுமதி விலை நிர்ணயம் மேம்படும். இதன்மூலம் காலப்போக்கில் உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு நகைகள் கூடுதல் மலிவாகக் கிடைக்கக்கூடும்" என்பது அவர்களின் வாதமாக உள்ளது.
மற்றொரு முக்கிய கோரிக்கை என்னவென்றால், ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்பது. தற்போது தங்கத்திற்கு 3 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதை 1-1.25 சதவீதமாக குறைத்தால், தங்கம் வாங்குவதை ஊக்குவிக்கும். தற்போது விலையானது கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவு உச்சத்தை தொட்டுள்ள நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகளால் விலையை ஓரளவு குறைக்க முடியும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இறக்குமதி வரியைக் குறைத்தாலும்
அதேவேளையில் பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி வரியைக் குறைத்தால், தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது. ஆனாலும் கூட தற்பொழுது தங்கம் விலை உயர்வுக்கு உலகளாவிய சந்தையின் தாக்கமே காரணம்.
எனவே, பட்ஜெட்டில் இறக்குமதி வரியைக் குறைத்தால் கூட, அது இந்தியாவில் தற்காலிகமாகத் தான் தங்கம் விலையை குறைக்க மட்டுமே உதவும் என்பது அத்துறை வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. தங்கம் விலை வீழ்ச்சிக்கு இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் ஒரு காரணமாக உள்ளது. எனவே ரூபாய் வீழ்ச்சி நிலைப்படுத்தப்படும் வரை தங்கம் விலை உயர்வு தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications